அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளருமான பி.கோபாலன் திருப்பூர் காங்கேயம் சாலை ஹவுசிங் யூனிட் பகுதியில் தனக்குச் சொந்தமான சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 5.5 சென்ட் இடத்தை மார்க்சிஸ்ட் கட்சிக்கு தானமாக வழங்கினார். அதற்குரிய ஆவணத்தை பி.கோபாலன், திருப்பூர் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்திடம் பலத்த கரவொலிக்கு இடையே வழங்கினார்.