மழையால் பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிப்பு
உதகை, அக்.13- மழை காரணமாக மஞ்சூர்- கோவை சாலையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்வதால் மேலும் 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை உட்பட தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட் டது. ஞாயிறன்று முதல் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பல இடங்களில் ஈரப்பதமாக காணப் படுகிறது. சாலையோரங்களில் வெள்ளம் தேங்கி நிற் கிறது. இந்நிலையில், திங்களன்று காலை, மஞ்சூர்- கோவை சாலையில் வனப்பகுதிக்குள் உள்ள பெரும்பள்ளம் மலைப் பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடந் தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப் பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதுகுறித்த தகவலின் பெயரில் தமிழக நெடுஞ்சாலைத் துறை நீலகிரி கோட்டப் பொறியாளர் குழந்தை ராஜ் உத்தர வின் பேரில், உதவி கோட்டப் பொறியாளர் ராஜா தலைமை யிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பொக்லின் வாகனம் மூலம் பாறைகளை உடைத்து அகற்றி, போக்குவரத்துதை சீர் செய்தனர். இதேபோன்று கோவை மாவட்டத்தில் திங்களன்று காலை முதல் கருமத்தம்பட்டி மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதி களில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டது. பின்னர், கருமேகங்கள் சூழ்ந்து, கருமத் தம்பட்டி, அன்னூர், பொகலூர், சிறுமுகை, தாளத்துறை, கார மடை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் விடா மல் கனமழை பெய்தது.
