தனியார் மய திட்டத்தை கைவிட வேண்டும் சாலைப் பணியாளர்கள் போராட்டம்
பொள்ளாச்சி, ஜூலை 29- நெடுஞ்சாலைத்துறை யில் தனியார் மய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங் கத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர் களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதி மன்ற வழக்குப்படி பணிக்கால மாக முறைப்படுத்த வேண் டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று பொள்ளாச்சி நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கோட் டத் தலைவர் எம்.வெற்றிவேல் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் ச.ஜெக நாதன் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி கே.பத்மநாபன் வாழ்த்திப் பேசினார். சாலைப்பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுறையாற்றி னார். இப்போராட்டத்தில் திரளான சாலை பணியாளர்கள் பங்கேற்றனர். முடிவில், கோட்டப் பொருளாளர் வி.சின்ன மாரி முத்து நன்றி கூறினார். சேலம் சேலம் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் கோட் டத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி கோட் டச் செயலாளர் என்.ராஜேந்திரன் பேசினார். மாநில துணைத்தலைவர் து.சிங்கராயன் துவக்கவுரையாற்றினார். இதில் அரசு ஊழி யர் சங்க முன்னாள் தலைவர் சி.முருகபெரு மாள், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜ்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.வடிவேலு, அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் ஆர்.ஸ்ரீபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.