tamilnadu

img

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரிய சாலைப் பணியாளர்கள் கைது

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரிய சாலைப் பணியாளர்கள் கைது

சென்னை, ஆக.12 - உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி செவ்வாயன்று (ஆக.12) சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்த வந்த சாலைப் பணியாளர்களை தடுத்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க  காலத்தை பணிக்காலமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டை திரும்ப பெற்று, அர சாணையை வெளியிட வேண்டும். கருணை அடிப் படையில் பணி நியமனம் கேட்டு 19 வருடங்களாக  பலர் விண்ணப்பம் செய்து காத்துக் கிடக்கின்றனர். எனவே, விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். சாலைகளை தனியார் மயமாக்கும் நடவடிக் கையை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை களை அரசே பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவகத்தில் மனு  அளித்து, எழிலக வளாகத்தில் தொடர் உண்ணா நிலைப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு  நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில், சங்கத்தின் மாவட்டத் தலைவர்களை, காவல் துறையினர் வீட்டு சிறை வைத்தனர். சென்னை நோக்கி வாகனங்களில் புறப்பட்டவர்கள் பல மாவட்டங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இத னையும் மீறி எழிலகம் வந்தவர்களை காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். காவல்துறையின் அடக்குமுறைகளை மீறி, சுமார் 50 பேர் வாலாஜா சாலையிலிருந்து சங்கத்தின்  பொதுச் செயலாளர் அம்சராஜ் தலைமையில் ஊர்வலமாக எழிலகம் நோக்கி வந்தனர். அவர் களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுகுறித்து பேசிய அம்சராஜ், “கோரிக் கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.  காவல்துறை விடுவித்தாலும் எழிலகம் சென்று போராட்டம் நடத்துவோம்” என்றார்.