tamilnadu

img

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அமைப்பு

மதுரை:
சாலைப் போக்குவரத்து தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை பெத்தானியாபுரம் தியாகிபாலு நினைவு லோடு ஆட்டோ ஸ்டாண்டு புதிய கிளை வெள்ளியன்று தொடங்கப்பட்டது. கிளைத் தலைவர்: அந்தோணிசாமி, செயலாளர்: வில்லியம் நிக்சன், பொருளாளர்:ரூபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், மதுரை மாநகர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் இரா.லெனின், தலைவர் இ.உதயநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அரசரடி பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன், டி.ஜான் மைக்கேல், பா.மாரிசாமி, கு.மாரிக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.