அடிப்படை வசதிகள் கேட்டு சிக்கல் கடை தெருவில் சாலை மறியல்'
நாகப்பட்டினம், செப். 18- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட சார்பாக, நாகை வடக்கு சங்கமங்களம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு சிக்கல் கடை தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் சிந்தன் தலைமையேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜோதி பாஸ், ஒன்றியத் தலைவர் தர்மராஜ், நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் 25-க்கும் மேற்பட்டோர், காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இன்னும் பத்து நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
