tamilnadu

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர்கள் மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், டிச.5- புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கை விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அனைத்திந் திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்  கத்தின் மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர்கள் சங்கத்தின் 5-ஆவது மாநில மாநாடு டிசம்பர் 1, 2 தேதிகளில் திருப்பூ ரில் நடைபெற்றது.  மாநாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்தவும், ஜூன் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஓய்வு  பெற்ற ஊழியர்களுக்கு ஒரு (நோசனல்  இன்கிரிமெண்ட்) சம்பள உயர்வு வழங்க வும், ஓய்வூதியர்கள் கம்முடேசன் தொகை யை திரும்ப செலுத்தும் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்கவும்,  முதியோருக்கு வழங்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை திரும்ப வழங்கவும், 65 வயது முதல் ஓய்வூதியத்தை 5 சதம்  உயர்த்தி வழங்கவும், நிர்ணயம் செய்யப்  பட்ட மருத்துவ தொகையை ரூபாய்  3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில், சங்கத்தின் தலைவராக ஏ.பழனிச்சாமி (மதுரை), பொதுச் செயலா ளராக பி.மோகன் (சென்னை), பொருளா ளராக ஜி.குமார் (சென்னை) உள்பட மாநி லச் சங்க நிர்வாகிகள் 125 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.