சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
பாபநாசம், ஆக. 4- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, அய்யம்பேட்டை சாலைத் தெரு போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. இந்தச் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் அமர்ந்து கொள்கின்றன. இதனால் விபத்து நேரும் ஆபத்து இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று, அய்யம்பேட்டையை அடுத்த கோயிலடி பேருந்து நிறுத்தம் அருகில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக உட்கார்ந்துக் கொள்கின்றன. மாவட்ட நிர்வாகம் இதிலும் உரிய கவனம் செலுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.