tamilnadu

img

உதயமானது நியூஸ் தமிழ் தொலைக்காட்சி: முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, ஜன. 23 - நியூஸ் தமிழ் 245x7 தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை ஞாயிறன்று (ஜன.23) தொடங்கியது. தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் இணைந்து நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சியை உரு வாக்கி உள்ளனர். தமிழ் செய்தி தொலைக்காட்சி உலகில் புதிய வரவாய் தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது நியூஸ் தமிழ் 24x7 தொலைக் ்காட்சி. இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஊடகப்பணி உண்மைகளை செய்திகளின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் அறப்பணி. உண்மைகளை உறுதியுடன் மக்களிடம் தெரிவிக்கும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. அந்த வகையில், தமிழ்நாட்டு ஊடகங்கள் வரிசையில் புதுவரவாக இணைந்துள்ள நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப உண்மைகளை ஆராய்ந்து செய்திகளை வழங்கி, ஊடக அறத்தினை நிலைநாட்டிட வாழ்த்து கிறேன்” என தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.