டென்னிஸ் விளையாட்டில் ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் பெற்றவர் வீனஸ் வில்லியம்ஸ், உலகத்தர வரிசை யில் முதல் இடம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி. செரீனா வில்லியம்ஸ் 23 முறை டென்னீஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர். உலகின் தலை சிறந்த டென்னீஸ் விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்திற்கு தகுதியானவர் என்பதும் நாம் அறிந்ததே! இந்த வெற்றிகளுக்கு பின்புலத்தில் ரிச்சர்ட் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி பிராண்டி ஆகியோரின் கனவும், அக்கனவை நனவாக்கிய நீண்ட போராட்டமும் உள்ளது என்ற செய்தி நாம் அறியாதது. இவர்களின் மெய்பட்ட கனவை பேசுகின்ற படம்தான் King Richard. திரைக்கதையினை சரியான திசை வழியில் அமைத்து, பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்ததன் மூலம் இப்படம் உலக அளவில் வெற்றி அடைந்துள்ளது. இப்பட நாயகன் வில் ஸ்மித் 2021-ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான அகாடமி விருதினை பெற்றுள்ளார். மேலும் இப்படம் உலக அளவிலான பல விருதுகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் இந்தியாவில் சாதியம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் பேயாட்டம் ஆடுகின்ற சூழலில், அமெரிக்காவில் தொண்ணூறுகளின் தொடக்கம்வரை வெள்ளை மக்களின் உள்ளங்களில் நிறவெறி ஆடிய பேயாட்டங்களுக்கு இடையில், செல்வந்தர்களின் விளையாட்டான டென்னிஸில், ரிச்சர்ட் தனது இரு பெண்பிள்ளைகளையும் உலகின் தலைசிறந்த வீராங்கனை களாக உருவாக்க நடத்திய தொடர் போராட்டத்தை படம் மிக நுணுக்கமாக பேசுகிறது.
இனி கதைக்குள் வருவோம். கலிபோர்னியாவில் கருப்பின மக்கள் வாழும் காம்ப்டான் நகரப்பகுதியில் ரிச்சர்ட் வில்லியம்ஸ் (Will Smith), அவரது மனைவி ஒராக்சீன் பிராண்டி (Ellis) வசிக்கிறார்கள். இருவரும் ஒருகாலத்தில் டென்னிஸை நேசித்து விளையாடிவர்கள். இவர்களுக்கு டுண்டே, வீனஸ், செரீனா, ஐஸா மற்றும் லின் ஆகிய 5 பெண் குழந்தைகள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, டென்னிஸ் விளை யாட்டில் வெள்ளையர்கள் மட்டுமே கோலோட்சிய காலம். ரிச்சர்ட் வெள்ளையர்கள் விளையாடும் டென்னிஸ் கிளப்புகளில் தூக்கி எறியப்பட்ட பந்துகளை பொறுக்குவது, அதனை தனது குழந்தைகளின் பயிற்சிக்கு பயன்படுத்துவது, மேலும், நகரில் கைவிடப்பட்ட டென்னிஸ் கிளப்பை தனது பிள்ளைகளின் பயிற்சிக்கு பயன்படுத்து வது, அத்துடன் இரவில் வேலைக்கு செல்வது. இவைதான் ரிச்சர்டின் அன்றாடப் பணிகள். வீட்டை கவனிப்பது மனைவி பிராண்டின் பணி. தனது டென்னிஸ் விளையாட்டு அனுபவத்தின் அடிப்படையில் வீனஸ் சகோதரிகளை டென்னிஸ்; நட்சத்திரங்களாக்குவதற்கான 78 பக்க செயல்திட்டத்தை டென்னிஸ் கிளப் நடத்தும் வெள்ளையர் களை ரிச்சர்டு சந்திப்பார். அதனை செயல்படுத்துவதற்கான நிதி கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிப்பார். அவர்களோ இவர் பேச்சை சட்டை செய்வதில்லை. கிண்டலுக்கு உள்ளாவதும் உண்டு.
வெள்ளையர்கள்தான் இப்படியென்றால் தன் இனத்து இளைஞர்களே தனது பெண்களை கேலி செய்வதும், அதை தட்டிக் கேட்கையில் மேற்படி வம்பர்களால் மகள்களின் கண்முன்னே தாக்கப்படுவதும் “கிழட்டு நீக்ரோவே” என வசைபாடுவதும் அடிக்கடி நிகழ்வாதாக இருக்கிறது. இவற்றையெல்லாம் சகித்தபடி தன் முயற்சியை பொறுமையுடன் தொடர்கிறார். ஒரு கட்டத்தில் ரிச்சர்ட், வீனஸ் மற்றும் செரீனாவை உலகப் புகழ்பெற்ற ஜான் மெக்கன்ரோ மற்றும் பீட் சாம்ராஸ் பயிற்சி நடக்கும் கிளப்பிற்கு அழைத்துச்சென்று பயிற்சியாளர் பவுல் கோகனை சந்திக்கிறார். இவரது ஆர்வம் மற்றும் திட்ட அறிக்கையை புரிந்து கொண்ட பயிற்சியாளர் சகோதரிகளை பீட் சாம்ராஸ் உடன் பயிற்சிக்கு அனுமதிக்கிறார். சகோதரிகளின் திறமைகளைக் கண்டு வியந்து அவர் வீனஸ்க்கு மட்டும் இலவச பயிற்சியளிக்க பவுல் சம்மதிக்கிறார். மனமுடைந்த செரினாவின் ரிச்சர்ட் தேற்றுகிறார். “நிச்சயம் உன்னை உலகம் திரும்பிபார்க்கும் வகையில் சாம்பியன் ஆக்குவேன்” என உற்சாகமூட்டி செரினாவுக்கு தனது மனைவி மூலம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறார். சகோதரிகளின் திறமை நாளுக்குநாள் மெருகேருகிறது. இவர்களுடைய திறமைக்கு புளோரிடாவில் உள்ள பயிற்சியாளர் ரிக் மாக்கிதான் சரியான பயிற்சியாளர் என பவுல் பரிந்துரைக்கிறார். உலகப்புகழ்பெற்ற டென்னிஸ் சாம்பியன் ஸ்டெபிகிராபைத் தோற்கடித்த ஜெனிபர் கேப்பிரியாட்டியின் பயிற்சியாளர்தான் ரிக் மாக்கி. உடனடியாக ரிச்சர்ட், ரிக் மாக்சியோடு ஒப்பந்தம் செய்து கொண்டு குடும்பத்துடன் ப்ளோரிடா செல்கிறார். மூத்த மகள் டிண்டேயை, அவரது படிப்பு காரணமாக கோம்டன் நகரிலேயே விட்டுச் செல்கிறார்கள்.
ப்ளோரிடாவில் இவர்களின் பயிற்சி அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுகிறது. பல ஜூனியர் பிரிவு போட்டிகளில் இச்சகோதரிகள் வெள்ளையின வீராங்கனைகளை அனாயசமாக வெல்கின்றனர். மறுபக்கம் கருப்பின மக்கள் மீதான வெள்ளை அதிகாரிகளின் தாக்குதல் நாட்டில் பல பகுதிகளில் நடைபெறுகிறது. இதனை பொறுமையுடன் சகித்துக் கொள்கின்றனர். இதன் பாதிப்பு வீனஸ் சகோதரிகளுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக உள்ளனர். ஒரு கட்டத்தில் உலகசாம்பியன் ஜெனிபர் கேபிரியாட்டி அறையில் போதைப்பொருள் சிக்க, அவரது. விளையாட்டு வாழ்வு முடிவுக்கு வருகிறது. இதனால் ரிச்சர்டு, பயிற்சியாளர் ரிக் மாக்கி மீது சந்தேகம் கொள்கிறார். வீனஸை, ஜூனியர் பிரிவில் விளையாட அனுமதி மறுக்கிறார். இருப்பினும் வீனஸின் மன உறுதியைக் கண்டு பெற்றோர்கள் அனுமதி அளிக்கின்றனர். 14 வயது வீனஸ் உடன் மோதுவது யாரென்றால் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அரண்டா சான்செஸ் விக்காரியர் ஆவார். ஆட்டத்தின் முதல் சுற்றில் வீனஸ் வெற்றி பெறுகிறார். இரண்டாவது சுற்றிலும் வீனஸ் முன்னேறிக் கொண்டிருக்கையில், சான்செஸ் பீதியடைந்தவராக விளையாட்டை நிறுத்தி, நடுவரிடம் அனுமதி பெற்று டாய்லெட் செல்கிறார். 9 நிமிடம் கழித்து மீண்டும் வருகிறார்.
ஆட்ட விதிப்படி இவ்வாறு செய்வது தவறு என ரிச்சர்ட் தனக்குத் தானே புலம்புகிறார். தாமதமாக வந்த சான்செஸ் அடுத்தடுத்த சுற்றில் வெற்றி பெறுகிறார். மனமுடைந்த வீனஸை, ரிச்சர்ட் ஆறுதல் படுத்துகிறார். ஸ்டேடியம் காலியாகி விளக்குகள் அணைக்கப்படு கின்றன. ரிச்சர்ட் குடும்பம், வீனஸ் உடன் ஸ்டேடியத்தை விட்டு வெளியேற கதவைத் திறக்கிறார்கள். அங்கு ஆயிரக்கணக்கான கருப்பின மக்கள் வெளிச்சத்துடன் “வீனஸ் சாம்பியன், சாம்பியன்” என கோரஸாக முழக்கமிட்டு உண்மையான வெற்றியாளர் வீனஸ் என்பதை உரக்க முழங்குவதுடன் படம் நிறைவடைகிறது. படத்தின் பல காட்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. சான்செஸ் ஒன்பது நிமிடம் டாய்லெட் சென்ற நேரத்தில் நின்று கொண்டே இருக்கும் வீனஸை எவரும் இவரை இருக்கையில் அமரச் சொல்ல வில்லை. தானாகவே சென்று அமருவார். அப்போது அவருடைய முகத்தில் குழந்தைத்தனமான பெருமிதமும் இறுமாப்பும் தெரியும். இக்காட்சி நிறவெறியிலிருந்து விடுதலை மற்றும் சமத்துவம் பெற்ற உணர்வை பார்வையாளர்களையும் ஏற்படுத்துகிறது. ரிச்சர்ட், தினந்தோறும் பயிற்சிக்கு திட்டமிட வேண்டியதன் அவசியத்தை, You fail to plan; you plan to fail என்ற மேற்கோலை பிள்ளைகளுக்கு காட்டும் காட்சிகள் சிறப்புக்குறியது. குயவெயளல வகைப்படமான Cibderella படத்தை காண்பித்து, சிண்டரல்லா கதாபாத்திரம் போல் நேர்மையாக இருக்கவும், கனவு காணவும், கனவை நிறுத்தாமல் தொடரந்து காணவேண்டும் என அறிவுரை தொடர்ந்து வழங்குகின்ற காட்சியும் கவனிக்கத்தக்கது. ரிச்சர்ட், தன் பிள்ளைகளிடம் காட்டும் தீவிரக் கண்டிப்பால் அக்கம்பக்கத்தினரிடம் எரிச்சலுக்கு ஆளாகிறார். போலீசில் புகார் ஆகிறது. வுpசாரணை நடக்கிறது. விசாரணையில் தாங்கள் நாகரீக மான சமூகம் என்பதை குழந்தைகள் மூலமாக சொல்வது வித்தியாச மானது. ரிச்சர்டு குடும்பத்துடன் உணவுக்கு முன் பிரார்த்தனை செய்யும்போது, “இந்த உணவை அளித்த கடவுளுக்கு நன்றி” எனக் கூறுவதோடு, “இந்த உணவை உண்பதால் எனது குழந்தை களுக்கு கொழுப்பு ஏறக்கூடாது கடவுளே” என்றும் பிரார்த்தனை செய்வார். இது நகைப்பானதாகத் தோன்றினாலும் அவரது வாழ்வின் நினைவிலும் செயலிலும் பிள்ளைகளின் டென்னிஸ் சாதனை மட்டுமே மேலோங்கி இருந்தது என்பதை காட்டுவதாக இருக்கிறது.
ஒருமுறை பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கையில் கருப்பின இளைஞர்களின் அத்துமீறலை கண்டிப்பார். ஆனால் அந்த இளைஞர்கள் இவரை குழந்தைகளுக்கு முன்பு அடிப்பதை எதிர்தாக்கு தல் செய்யாமல் ஏற்றுக் கொள்வார். இதுகுறித்து குழந்தைகளிடம் விவரிக்கையில், தான் சிறு வயதாக இருக்கையில், தனது கை வெள்ளை இனத்தவர் மேல் பட்டமைக்காக, வெள்ளையர்கள் இவரை தனது தந்தைக்கும் முன் அடித்ததாகவும், அவ்வாறு அடிக்கையில் தனது தந்தை, இவரை காப்பாற்ற முடியாமல் ஓடியதையும் பிள்ளைகளிடம் நினைவு கூறுகின்ற காட்சியில், வில் ஸ்மித்தின் நடிப்பு அழகு. ரிச்சர்டின் கனவிற்கு பக்க பலமாக உள்ள மனைவி கதாபாத்திரமான பிராண்டிக்கு கதை ஒட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்காதது படத்தின் குறையே. இசை படத்திற்கு முக்கிய பங்காற்றி யுள்ளது. இப்படத்தை ரினால்டோ மார்கஸ் க்ரீன் இயக்கியுள்ளார். நல்ல திரைப்படத்தை பார்த்த நிறைவு ஏற்படுகிறது. படம் முழுவதும் தனக்கு விழுந்த அடிகளால் ஏற்பட்ட உடல் காயங்களையும் மனக்காயங்களையும் தாங்கிக் கொண்டு, மன உறுதியை மட்டும் விட்டு விடாதவராக நடித்த வில் ஸ்மித்-க்கு சிறப்பாக நடித்ததாக அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மேடையில் தொகுத்து வழங்கிய , கருப்பின சிரிப்பு நடிகரான கிரிஸ் ராக் (Chris RHck) ஸ்மித்தின் மனைவியை நகையாடினார். இதைக் கண்டு பொறுக்க மாட்டாத ஸ்மித் வெகுண்டெழுந்து மேடைக்கு சென்று, அந்த நடிகரை அறைந்தார். பின்னர் இவ்வாறு உணர்ச்சி வயப்பட்டதற்கு மன்னிப்பும் கேட்டார். சாதிக்க முனைந்த ரிச்சர்டு கேலிகளையும் தாக்கு தல்களையும் சகிக்கப் பழகினார். சாதித்த நடிகர் ஸ்மித் கேலிகளைச் சகிக்கத் தவறினார். இது ஒரு நனை முரண் எனலாம்.