tamilnadu

img

வருவாய்த்துறை தினம் வருவாய் துறை சங்கம் கொண்டாட்டம்

வருவாய்த்துறை தினம்  வருவாய் துறை சங்கம் கொண்டாட்டம் 

கரூர், ஜூலை 3-   வருவாய்த்துறை சார்பில், பசலி ஆண்டின் முதல் நாள் ஜூலை 1 ஆம் நாள் வருவாய்த்துறை தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் வருவாய்த்துறை தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.   கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நேரில் சென்று இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எம்.எஸ். அன்பழகன், மாவட்டத் தலைவர் இரா. மோகன்ராஜ், மாவட்ட பொருளாளர் அருண், மாவட்ட துணைத் தலைவர் சுமதி மற்றும் வருவாய்த்துறை கூட்டமைப்பு நிர்வாகிகள், மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.