tamilnadu

img

பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு

புதுதில்லி, ஜன.23- பெரும்பான்மை மக்களை கல்வி கற்பதிலிருந்து அப்புறப்படுத்திடும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநில 16ஆவது மாநாடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநில 16 ஆவது மாநாடு போபாலில் ஜனவரி 16-18 தேதி களில் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவுரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், நம் நாட்டிலும் சரி, உலகத்திலும் சரி கொடுங்கோன்மை மிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களில் இறுதி வெற்றி மக்க ளுக்கே கிடைத்திருக்கிறது என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.  மேலும் கூறுகையில், “உழைக்கும்  மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களையெல்லாம் எப்படித் தியாகங்களைச் செய்து,

அவற்றி லிருந்து மீண்டு, வெற்றி பெற முடியும் என்பதை அறிந்திருக்கிறார்கள். இடது சாரிகள் பலவீனமாகிவிட்டார்கள் என்று  கூறுவது கற்பனையே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது இடதுசாரி களின் பலத்தை அளப்பதற்கு நாடாளு மன்றத்தில் அதற்குள்ள பலத்தை வைத்து மட்டும் பார்க்கக்கூடாது. மக்களுக்கும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் இடையேயுள்ள உறவுகளையும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளை சரிசெய்து கொண்டு எப்படி முன்னேறுகிறார்கள் என்றும் பார்த்திட வேண்டும். சமீபத்தில் நாட்டில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் இடதுசாரிகள் முன்னணியில் நின்றார்கள்.   சமீபத்தில் நடைபெற்ற வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத் திலும், கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த  அகில இந்திய வேலை நிறுத்தத் திலும் இடதுசாரிகளின் பங்களிப்பைக் கூறினால் அதுவே  இதற்கு விளக்கமாக அமைந்திடப் போதுமானதாகும். வர விருக்கும் காலங்களில் இதனை மேலும் விரைவுபடுத்திட வேண்டும். 

மத்தியப்பிரதேசத்திலும்கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உள்ளூர்ப் பிரச்சனைகளின் மீது கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தி வேகத்துடன் முன்னேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த மூன்று  நாட்களாக இங்கே மாநாட்டில் பிரதிநிதி கள் விவாதங்களில் தெரிவித்த விஷ யங்கள் அவற்றை நன்கு காட்டுகின்றன என்று யெச்சூரி பேசினார். மாநாட்டின் இரண்டாவது நாள் உரையாற்றிய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி,  பாஜக ஆட்சியின் கீழ் மாநிலத்தில் சமூக அநீதி அதிகரித்துக்கொண்டி ருப்பதையும், மனு(அ)தர்மத்தின் அடிப்படையில் ஆட்சியை நடத்திட வேண்டும் என்று அது விரும்புகிறது என்றும் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சி களும் ஆர்எஸ்எஸ்/பாஜகவின் மனு (அ)தர்மக்கொள்கைகளை எதிர்த்து முறியடித்திட வேண்டும் என்று வலி யுறுத்தினார். மாநிலத்தில் இயக்கத்தை  விரிவுபடுத்திட பல்வேறு ஆலோசனை களையும் தெரிவித்தார். மாநாட்டில் மொத்த பிரதிநிதிகளில் 90 சதவீதத்தினர் பங்கேற்றார்கள். மொத்தம் 197 பிரதிநிதிகள்/பார்வை யாளர்கள் பங்கேற்றார்கள். மாநாட்டில் 30 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு  செய்யப்பட்டது. மாநிலச் செயலாள ராக ஜஸ்வீந்தர் சிங் தேர்வு செய்யப் பட்டார். 11 உறுப்பினர் கொண்ட மாநிலச்  செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.  

தீர்மானங்கள்

புதிய கல்விக்கொள்கையானது கல்வியில் வணிகமயத்தை அதிகரிப் பதற்காகவே கொண்டுவரப் பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் பெரும்பான்மையான குடும்பத்தின ருக்கு கல்வி மறுக்கப்படும் என்று கூறி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரைப் பாதிக்கும் பிரச்சனை கள் மீதும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.                 (ந.நி.)
 

;