tamilnadu

img

தமிழகத்தில் பின்னலாடை, விசைத்தறி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர், மே 16- மாதந்தோறும் அபரிமிதமாக உயர்ந்து வரும் நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் பின்ன லாடைத் தொழில் அமைப்புகள் மற்றும்  தமிழகத்தின் ஜவுளி உற்பத்தி மையங் களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில்,  2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் திங்களன்று தொடங்கி யது. இப்போராட்டத்தில் பின்னலா டை, விசைத்தறி நிறுவனங்கள் முழுமையாக பங்கேற்றன. திருப்பூர் பின்னலாடைத் தொழி லுக்கு நூல் தான் பிரதான  மூலப்பொருள் நூல் விலை உட்பட மூலப்பொருட் களின் விலையை கருத்தில் கொண்டு,  ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருவது தொழில்துறையினரிடயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நடப்பு மாதத்தில் நூல் விலை கிலோ வுக்கு ரூ. 40 உயர்ந்ததால், தொழில் துறையினர் பலரும் விரக்தியின் உச்சநிலைக்கு சென்றனர். வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி  (356கிலோ) பஞ்சு விலையும் ரூ. 1லட்சத்தை கடந்திருப்பதால், வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும்  உயரும் என்ற அச்சம் தொழில்துறை யினர் மத்தியில் தற்போதே நிலவு கிறது. 

அத்தியாவசிப் பொருள் பட்டி யலில் பஞ்சை இடம்பெற செய்ய வேண்டும் என்ற, கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு முன் வைத்துள்ள னர். அதேசமயம், பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி மற்றும் நூல்  ஏற்றுமதியை ரத்து செய்து உள்நாட்டு  உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். நூல் இறக்குமதிக்கான வரியை நிரந்தர மாக ரத்து செய்ய வேண்டும், ஊக வாணிகம் பட்டியலில் இருந்து பருத்தி யை நீக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் பின்னலாடை, விசைத் தறி நிறுவனங்கள் வலியுறுத்தப் பட்டுள்ளது. திருப்பூரில் திங்களன்று  தொடங்கிய போராட்டத்தை ஒட்டி பல்வேறு தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திருப் பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க்  நிறுவனங்கள் என அனைவரும் முழுமையாக போராட்டத்தில் பங்கெடுத்தன. திருப்பூரில் மட்டும்  சுமார் 10 ஆயிரம் பின்னலாடை மற்றும்  அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங் கள் இந்த பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

விசைத்தறிகள் வேலைநிறுத்தம்

திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நூல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருத்தி, கழிவு பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், பதுக்கல் பஞ்சை வெளியில் கொண்டு வரவும் அர சாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து 2 மாவட்டங்க ளிலும் விசைத்தறிகள் முழுமையாக இயங்க வில்லை. செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நூல் விலை உயர்வு எதிர்ப்பு தெரிவித்து, ஜவு ளித் தொழிலையும், பல லட்சம் தொழிலா ளர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கக் கோரியும், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்  எதிரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.

கரூரில்

ஜவுளித் தொழிலை பாதுகாக்கக் கோரி கரூரில் ஜவுளி நிறுவனங்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் துவக்கியுள்ளன. கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்  சங்கம்,  கரூர் வீவிங் மற்றும் நிட்டிங்  ஓனர் அசோசியேசன்,  கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம்,  கரூர் நூல் வர்த்தகர்கள் சங்கம் ஆகிய  அமைப்புகளின் சார்பில் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக கரூர்  மாவட்டத்தில் உள்ள சுமார் 400  ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400   உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150   நூல் வினியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங்  தொழிற்சாலைகள்,  500-க்கும்  மேற்பட்ட  சிறு தையல்  நிறுவனங்கள்,  500க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த  நிறுவனங்களின் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் தொழி லாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். இந்த உற்பத்தி நிறுத்தத்தின் காரணமாக சுமார் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமான  அள வில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித் துள்ளார்கள்.  கரூரில் இருக்கக்கூடிய ஜவுளி சார்ந்த அனைத்து அமைப்புகளின் நிர்வாகக் குழு வினர் கூடி மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜியிடம்  நூல் விலை ஏற்றத்தின் காரணமாக ஜவுளித்தொழிலில் ஏற்பட்டிரு கும் பிரச்சனைகளை எடுத்துக் கூறி,  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒன்றிய அரசிற்கு  நூல் விலையை குறைக்க ஆவன செய்ய வலி யுறுத்துமாறு கோரிக்கை மனு வழங்க  உள்ள தாகவும், இதனைத் தொடர்ந்து, இதே  கருத்தை வலியுறுத்தி  ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர்  பியூஸ் கோயலை சந்தித்து  கோரிக்கை மனு  வழங்க  திட்டமிட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;