tamilnadu

முறைகேடாக இயங்கும் வாகனம் நடவடிக்கை எடுக்கக்கோரி ம

முறைகேடாக இயங்கும் வாகனம் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

நாமக்கல், ஜூலை 24- முறைகேடாக இயங்கும் வாகனத்தின் உரிமையாளர் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் விநாயகா டிராவல்ஸ் என்ற பெயரில் மாருதி சுசுகி ஈகோ டூர் நான்கு சக்கர வாகனத்தை இயக்கி  வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்  இந்த வாகனத்தை ஓட்டி வரும் நிலையில், இதே வாகனத் தின் பதிவு எண் கொண்ட தமிழக அரசின் சுகாதாரத் திட்டத் தின் கீழ் இயங்கும், தேசிய குழந்தை சுகாதார திட்டம்  என்ற பெயரில் வெப்படை அடுத்துள்ள எலந்த குட்டை அரசு  மருத்துவமனையில் வாகனம் இயங்குவதை அறிந்துள் ளார். இதுகுறித்து மணிகண்டன் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியிடம் புகார் மனு  வழங்கியுள்ளார். அதில், எனது வாகனத்தின் பதிவு எண்ணை  போலியாக பயன்படுத்தி வேறு ஒரு வாகனம் இயங்கிக் கொண்டிருப்பதால், அந்த வாகனத்தின் உரிமையாளர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.