மத்திகிரி கால்நடை பண்ணை அருகே உதிர்ந்த சாலையை சரி செய்யக் கோரிக்கை
கிருஷ்ணகிரி, ஜூலை 3- ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மத்திகிரி அரசு கால்நடை பண்ணை உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை பெயர்ந்து நீண்ட காலமாக குண்டும் குழியுமாக இருந்தது. பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் இதுகுறித்து நீண்ட நாட்களாக வலி யுறுத்திய நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு சாலை பராமரிப்பு பணியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தார் போடப்பட்டது. ஆனால் ஒரு சில வாரங்கள் கூட தாக்குப்பிடிக்காமல் போடப்பட்ட தார் பொலபொலவென உதிர்ந்து போக்குவரத்திற்கு கடும் இடை யூறாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பலர் இப்பகுதியில் சறுக்கி விபத்துக்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நட வடிக்கை எடுத்து மீண்டும் சரியாக தார் சாலை போட வேண்டும் என்றும், முன்பு பராமரிப்பு செய்வதாக கூறி அரசின் நிதியை வீணடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.