tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

போராட்டங்கள் நடத்துவதற்கு  கரூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கோரிக்கை

கரூர், ஆக.20 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கரூர் மாவட்ட 5 ஆவது  மாநாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில்  நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் து.சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பெ.விஜயலட்சுமி அஞ்சலி தீர்மா னங்களை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் வி.மோகன்குமார் வரவேற்று பேசி னார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் மு.சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் வேலை  அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் கு.சோமசுந்தரம் வரவு-செலவு அறிக்கையை யும் முன்வைத்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். சங்கத் தின் மாநில துணைத்தலைவர் முனைவர் ஆர். சங்கரி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  மாவட்டத்தின் புதிய தலைவராக து.சாமு வேல் சுந்தரபாண்டியன்,  செயலாளராக கெ.சக்திவேல்,   பொருளாளராக ஆர். செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட துணைத்தலைவர் அ. ஜெயவேல் நன்றி கூறினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க  வேண்டும். ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்துவதற்கு கரூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம், கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாளை உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு முகாம்

தஞ்சாவூர், ஆக.20 -  நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர் களின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக் கும் பொருட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.  இதன் மூலம் உயர் கல்வி சேரும் மாண வர்கள், பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், ஏதிலியர் முகாமில் வாழும்  மாணவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்பு ணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப உறுப் பினர்கள், உடல்நிலை சரியில்லாத காரணத் தால், பெற்றோர் விருப்பமின்மையால் மற்றும்  சமூக காரணங்களால் உயர்கல்வி செல்ல இய லாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்ப டும் மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கையில் ஏற்படும் குறைபாடு களுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கம்  அறை எண்.10-இல் மாவட்ட ஆட்சியர் தலை மையில், ஆக.22 (வெள்ளி) அன்று காலை 10  மணி முதல் மதியம் 1 மணிவரை குறைதீர் கூட்டம்  நடைபெற உள்ளது. உயர்கல்வியில் சேர விருப்ப முள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்  என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.