பழுதடைந்த ரேசன் கடை கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட கோரிக்கை
பாபநாசம், செப். 13 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஒன்பத்து வேலியில் உள்ள ரேசன் கடை கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஒன்பத்து வேலி, சங்கராம்பேட்டை, நாகலூர், நிறைமதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 550 ரேசன் கார்டுதாரர்கள், ரேசன் பொருட்களை வாங்க ரேசன் கடைக்கு வருகின்றனர். மழை நாட்களில் ரேசன் கடை கட்டடத்தின் உள்ளே மேற்கூரையிலிலிருந்து நீர் கசிவதால், கடை ஊழியர் ரேசன் பொருள் மூட்டைகளை அடுக்கச் சிரமப்படுகிறார். எனவே பழுதடைந்த ரேசன் கடை கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக தரமாக கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று, அங்குள்ள நூலக கட்டடமும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதையும் இடித்து விட்டு, புதிதாக தரமாக கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பாபநாசம், செப். 13- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, சக்கராப்பள்ளியில் சக்கராப்பள்ளி, சூலமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் செந்தில் தலைமை வகித்தார். இதில், கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்ததுடன், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கினார். இதில் முன்னாள் மாவட்டக் கவுன்சிலர்கள் அய்யாராசு, தாமரைச் செல்வன், தி.மு.க பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் தாசில்தார் பழனிவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் உரிய நடவடிக்கைக்கு துறை வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன.