ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்க! அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் இருந்து ஓய்வூதியர்களை நீக்கி வைக்கும் நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும். 4 தொகுப்பாக சுருக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோரிக்கை விளக்க தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எம்.வி. செந்தமிழ்ச்செல்வன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் துளசிராமன், மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சந்தனமூர்த்தி, மணப்பாறை வட்டக் கிளை தலைவர் வெள்ளைச்சாமி, அய்யப்பநகர் கிளைச் செயலாளர் ராஜாராமன், மண்ணச்சநல்லூர் வட்டக்கிளைச் செயலாளர் கலைவாணன், துறையூர் வட்டக் கிளைச் செயலாளர் ராஜப்பா, திருவெறும்பூர் வட்டக் கிளை தலைவர் பழனியப்பன், லால்குடி வட்டக் கிளை அமைப்பாளர் பால்ராஜ் ஆகியோர் பேசினர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜபருல்லா தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.வெள்ளைச்சாமி, பொருளாளர் கி.ஜெயபாலன் ஆகியோர் பேசி னர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி வாழ்த்திப் பேசினார். தஞ்சாவூர் தஞ்சாவூரில், பனகல் கட்டி டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மாவட்ட தலைவர் இர. கலியமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்மணி துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். சூரியமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை ஆதரித்து பேசினர். நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையம் சார்பில் செவ்வாயன்று நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு, மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் தலைமையில் அகில இந்திய கோரிக்கை நாள் தர்ணா நடைபெற்றது. நாகப்பட்டினம் வட்டச் செயலாளர் ஆர். மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் வி. பாலசுப்பிரமணியன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சு.சிவகுமார் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். கரூர் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் து.சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் வி.மோகன் குமார் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மு.சுப்பிரமணியன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கெ. சக்திவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன். ஜெயராம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி. கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் மாவட்டச் செயலாளர் எல்.கே. சுப்பிரமணியன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் கே. சோமசுந்தரம் நன்றி கூறினார். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.சண்முகம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். செங்குட்டுவன் துவக்கி வைத்து உரையாற்றினார். அமைப்பின் மாவட்டச் செயலாளர் வி.முனியன், எல்ஐசி ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் செந்தில்குமார், அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். புஷ்பநாதன் மற்றும் துறைவாரி சங்கத்தினர் உரையாற்றினர். மாநிலச் செயலாளர் குரு. சந்திரசேகரன் நிறைவுரை ஆற்றினார்.