tamilnadu

img

டாஸ்மார்க் கடைகளை அகற்றிடுக மாதர் சங்க செங்கல்பட்டு மாவட்ட மாநாடு தீர்மானம்

டாஸ்மார்க் கடைகளை அகற்றிடுக மாதர் சங்க  செங்கல்பட்டு மாவட்ட மாநாடு தீர்மானம்

செங்கல்பட்டு, ஆக.30-  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அப்புறப்படுத்தவேண்டும் என மாதர்சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட14வது  மாநாடு மதுராந்தகம் வட்டம் கருங்குழியில் வியாழனன்று(ஆக.28) மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஸ்தாபனத் தலைவர்களில் ஒருவரான குஞ்சிதம் பாரதிமோகன் அம்மா ஸ்தாபன கொடியை ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் வி.தமிழரசி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஸ்தாபன வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ஜி.ஜெயந்தி சமர்பித்தார். மாநாட்டினை வாழ்த்தி மாநிலத் துணைத் தலைவர் இ.மோகனா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜீவானந்தம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தாட்சாயணி மாநாட்டை வாழ்த்தி பேசினர். செங்கல்பட்டு ராட்டின் கிணறு பகுதியில் அமைந்துள்ள 3 டாஸ்மாக் கடைகள், மதுராந்தகம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக், செய்யூர் வட்டம் கீழ்மருவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைகளால் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்,மாணவிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அன்றாடம் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை அகற்றவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநில செயற்குழு எம். சித்ரகலா நிறைவுரை யாற்றினர்.   நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவராக. யூ.அனுசுயா, செயலாளராக ஜி.ஜெயந்தி, பொருளாள ராக கே.நவரத்தினம் உள்ளிட்ட13பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப் பட்டது.