தூத்துக்குடி, ஜூன் 22 இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியா வசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப் பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட் கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறி வித்தார். அதன்படி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றது. இந்த கப்பலில் 14 ஆயிரத்து 700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் ஏற்றப்பட்டு உள்ளது. மொத்தம் 15 ஆயி ரம் டன் நிவாரண பொருட்களுடன் தூத் துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு சென்றது.
இந்த கப்பலை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமி ழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உணவு மற்றும் குடி மைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பி னர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப் பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.