tamilnadu

img

இடி தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி

இடி தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி

தஞ்சாவூர், ஜூலை 8-  தஞ்சாவூர் மாவட்ட பூதலூர் வட்டம் புதுக்குடி வடபாதி கிராமம் காளியம்மன் கோவில் தெருவினை சேர்ந்த அங்குபாப்பா என்பவர் கடந்த மே.14 ஆம் தேதியன்று இடி தாக்கி உயிரிழந்த நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அவரது வாரிசுதார்கள் பார்த்திபன், பாலாஜி, பானுபிரியா, பவித்ரா ஆகிய நால்வருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சாவூர் நாடளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர் நெ. செல்வம், பூதலூர் வட்டாட்சியர் ஆர். கலைச்செல்வி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் அழகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.