tamilnadu

img

லத்தீன் அமெரிக்காவில் சிவப்பு வசந்தம்

பகோட்டா, ஜூன் 22- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜன நாயகப் படுகொலைகள் மற்றும் தேர்தல் சதி களை லத்தீன் அமெரிக்கா வலுவாகத் தோற்க டித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொலம்  பியா ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரித் தலை வரான குஸ்தவோ பெட்ரோ மாபெரும் வெற்றி  பெற்றுள்ளார். தங்களின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்காதவர்களை லத்தீன் அமெரிக்கா வில் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது அமெரிக்க கொள்கை.தனக்கு சவால் விடும்  நாடுகளை ஒடுக்க அமெரிக்காவின் ராணுவம்  இறக்கிவிடப்படும், அல்லது பணம் கொடுத்து  நாட்டில் கலவரங்களை ஏற்பாடு செய்வார்கள். இன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதே உத்தி யை கையாண்டு வருகிறது. ஆனால் எதுவும்  பழையபடி செயல்படுவதாகத் தெரிய வில்லை. மாறாக, லத்தீன் அமெரிக்கா இடது  பக்கம் செல்கிறது. வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த அந்த இளஞ்சிவப்பு அலைக்கு லத்தீன் அமெரிக்கா மீண்டும் நகர்கிறது. கொலம்பியா, ஹோண்டுராஸ், நிகரகுவா, பெரு மற்றும் சிலி தேர்தல்கள் அனைத்தும் லத்தீன் அமெரிக்க மக்கள் இடது பக்கம் நகர்  வதைக் காட்டுகின்றன. 2021 நவம்பர்-டிசம்பர்  மாதங்களில் ஐந்து நாடுகளில் நடந்த தேர்தல் களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். கறுப்புப் பட்டியலில் சேர்த்து ஆட்சிகளைச் சீர்குலைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளும் இடது முன்னணிகளின் முன்பு தோல்வியடைந்தன.

சிலியின் ஜனாதிபதியாக, இடது சாரித் தலைவர் கேப்ரியல் போரிக் பொறுப்பேற்றது புதிய வரலாற்றின் தொடக்கமாக மாறியது.  மார்க்சிஸ்ட்டான சால்வடார் அலெண்டே சிஐஏ  சதி மூலம் படுகொலை செய்யப்பட்டு, 48 ஆண்டுகளுக்குப் பிறகு சிலியில் மீண்டும் ஒரு இடதுசாரி ஆட்சி சாத்தியமாகியிருக்கிறது.  2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பாரக்  ஒபாமா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரால் ஹோண்டு ராஸ் இடது சாரி ஜனாதிபதி மனுவேல் செலாயா வின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அமெரிக்கா வுக்கு வளைந்து கொடுக்காததும், ஹியூகோ சாவேஸுடன் ஏற்பட்ட நெருக்கமும்தான் அதற்குக் காரணம். நிகரகுவாவில் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு  ஏவியுள்ள தொடர்ச்சியான பொருளாதார மற்  றும் ராஜீய நகர்வுகளுக்கு மத்தியில் தொடர்ச்சி யாக நான்காவது முறையாக டேனியல்  ஒர்டேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இடதுசாரி ஆட்சியை அகற்றுவதற்கான ஏகாதிபத்திய முயற்சிகள்  விலைபோகாது என்பதை 2021 நவம்பர் 21 அன்று நடைபெற்ற மாகாண ஆளுநர்கள் மற்  றும் நகராட்சிகளுக்கான தேர்தல்கள் முடிவு கள் அடிக்கோடிட்டுக் காட்டின. ஜூலை 2018 தேர்தலில் மெக்சிகோவில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஒப்ரடோர் வெற்றி பெற்  றார். இது அந்த நாட்டின் 49 ஆண்டுகால வர லாற்றில் இடதுசாரிகளின் முதல் வெற்றி யாகும். இந்த நிலையில், கொலம்பியாவின் வெற்றி சிவப்பு வசந்தத்தின் மற்றுமொரு சாதனை யாகும்.

இதுவரை நடந்த இடதுசாரி மாற்றம்

கொலம்பியா 
(20 ஜூன் 2022)
ஜனாதிபதி: குஸ்தவோ பெட்ரோ, கட்சி: மனித கொலம்பியா (ஹியுமன் கொலம்பியா)

சிலி 
(டிசம்பர் 21, 2021)
ஜனாதிபதி: கேப்ரியல் போரிக், கட்சி: 
சமூக ஒருங்கிணைப்பு கட்சி

 

ஹோண்டுராஸ் (நவம்பர் 29, 2021)
ஜனாதிபதி: சியோமாரா காஸ்ட்ரோ, கட்சி: 
லிபரல் கட்சி

 

நிகரகுவா 
(நவம்பர் 8, 2021)
ஜனாதிபதி: டேனியல் ஒர்டேகா, கட்சி: தேசிய 
விடுதலைக்கான சாண்டானிஸ்டா முன்னணி (FSLN)

 

பொலிவியா 
(அக்டோபர் 19, 2020)
ஜனாதிபதி: லூயிஸ் ஆர்ஸ் கேடகோரா, கட்சி: சோசலிசத்திற்கான இயக்கம்

 

பெரு 
(ஜூலை 19, 2021)
ஜனாதிபதி: பெட்ரோ காஸ்டிலோ, கட்சி: சுதந்திர பெரு தேசிய அரசியல் கட்சி

 

மெக்சிகோ (ஜூலை 2, 2018)
ஜனாதிபதி: ஆன்ரஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரேடர், கட்சி: ஜுன்டோஸ் ஹார்மோஸ் ஹிஸ்டோரியா (Juntos Haremos Historia)

 

அர்ஜென்டினா (அக்டோபர் 28, 2019)
ஜனாதிபதி: 
ஆல்பர்டோ பெர்னாண்டஸ், பெரோனிஸ்ட் கட்சி

 

 

வெனிசுலா (மே 20, 2018)
ஜனாதிபதி: நிக்கோலஸ் மதுரோ, வெனிசுலாவின் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (1999 இல் ஹியூகோ சாவேஸ் தலைமையில் முதலாவது அரசு அமைந்தது.)

 

கியூபா (ஏப்ரல் 20, 2018)
ஜனாதிபதி: மிகயேல் தியாஸ் கேனல், கட்சி: கியூப கம்யூனிஸ்ட் கட்சி (1959 முதல் ஆட்சியில் உள்ளது)