tamilnadu

img

ரேஷன் கடை மேற்கூரை  பெயர்ந்து விழுந்து  உதவியாளர் படுகாயம்

ரேஷன் கடை மேற்கூரை  பெயர்ந்து விழுந்து  உதவியாளர் படுகாயம்

மயிலாடுதுறை, செப். 23-  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பொன்செய் கிராமத்தில், அங்காடி மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், உதவியாளர் படுகாயம் அடைந்தார்.  கிடாரங்கொண்டான் ஊராட்சி பொன்செய் கிராமத்தில் இயங்கி வரும் அங்காடியில், சித்ரா என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். விற்பனையாளருக்கு உதவியாளராக பொன்செய் அக்ரஹார தெருவைச் சேர்ந்த சவுரிராஜன்(62) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திங்களன்று காலை வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. அப்போது, அங்கு ரேஷன் பொருட்கள் எடுத்துக் கொண்டிருந்த சவுரிராஜன் தலையில் திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அங்காடி செயல்படும் கட்டிடம் பழுதடைந்துள்ளது குறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் தான்  இச்சம்பவம் நடந்துள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.