மேற்குவங்கத்தில் திங்களன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது திரிணாமுல் கட்சியினர் வாக்குச்சாவடியை சூறையாடியேதோடு பரவலாக முறைகேடுகளில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து பர்துவானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயக நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து கூச்பிஹார் மாவட்டம் தின்ஹாட்டா நகரிலும் இடது முன்னணி சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.