ராஜஸ்தான் மருத்துவமனையில் கோரச் சம்பவம் தீ விபத்தில் சிக்கி 6 நோயாளிகள் பலி : 5 பேர் கவலைக்கிடம்
ஜெய்ப்பூர் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது எஸ்எம்எஸ் என அழைக்கப்படும் சவாய் மான் சிங் மருத்துவமனை. இது ஜெய்ப்பூரில் மட்டுமின்றி ராஜஸ்தா னிலேயே மிகப்பெரிய மற்றும் மிக பழமையான அரசு மருத்துவமனை ஆகும். இந்நிலையில், இந்த மருத்துவ மனையின் “அவசர சிகிச்சைப் பிரிவில் (Trauma ICU)” ஞாயிற்றுக் கிழமை இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்த னர். படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து மின்னணுச் சுற்றில் ஏற்பட்ட கோளாறு (short circuit) காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசார ணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக எஸ்எம்எஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பாளர் டாக்டர் அனுராக் தாகத் கூறுகையில், “இரண்டாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு மொத்தம் 24 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கோமா நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தனர். தீ விபத்தின் போது நச்சு வாயுக்கள் வேகமாகப் பரவியது. தீவிபத்து நடந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நோயாளி களில் 6 பேர் (இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள்) மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்களுக்கு சிபிஆர் (CPR) அவசர முதலுதவி சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடிய வில்லை. 5 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என அவர் கூறினார். உறவினர்கள் குற்றச்சாட்டு தீவிபத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள், “தீ விபத்து ஏற்பட்ட போது மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறை பாடு இருந்தது” என செய்தியாளர்க ளிடம் குற்றம்சாட்டினர். ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்த பின், இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார்.
