திண்டுக்கல், ஜூலை 19- தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது என்று ஆர். சச்சிதானந்தம் எம்.பி. தெரி வித்துள்ளார். கோவையில், கல்வியாளர்களு டன் ‘தேசிய கல்விக்கொள்கை 2020’ குறித்த கலந்துரையாடல் என்ற பெய ரில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர்களுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோ சனைக் கூட்டம் நடத்தியுள்ளார். நட்சத்திர ஹோட்டலில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வி நிறு வனங்களின் தலைமை பொறுப்பா ளர்களுடன் கல்வித்துறையின் மேம் பாடு, மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட தாக கூறப்பட்டுள்ளது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணா மலை, தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜகவின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். புதிய கல்விக்கொள்கை தொடர் பாக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு பரிந்துரையின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கெனவே தர்மேந்திர பிர தான் தனது கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார். இதனைக் குறிப்பிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் தமது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில், “மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களே தமிழ் நாட்டுக்கு ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டுக்கான 2152 கோடி நிதியை எப்போது வழங்கு வீர்கள்?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார். “குலக்கல்வியை போதிக்க கூடிய உங்களின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாடு ஒருபொழுதும் ஏற்காது” என்றும் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. தெரிவித்துள்ளார்.