சாதி ஆணவக்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்
மதுரை, ஆக.30- தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மதுரை கருத்தரங்கில் வலியுறுத்தப் பட்டது. நாட்டைக் காப்போம் அமைப்பு சார்பில் “ஆண வக்கொலைக்கு எதிராக ஓர ணியில் தமிழ்நாடு அணி வகுக்குமா” என்ற தலைப் பில் வெள்ளியன்று மதுரை யில் கருத்தரங்கம் நடை பெற்றது. வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் தலைமை வகித்தார். சாதி அரசியல் வலுவாக இருக்கும் வரை... இக்கருத்தரங்கில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், “தமிழகத்தில் சாதி அடிப்ப டையிலான அரசியல் வலு வாக நிலைத்திருக்கும் நிலை யில் ஆணவக்கொலை தடுப்பு தனிச்சட்டம் அவசி யம்” என்றார். “மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்க ளை சாதிக்கொடுமை அதி கம் நடைபெறும் பகுதிக ளாக அரசு அறிவிக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி வழக்குகளில் குற்றவாளி களுக்கு காவல்துறை சரி யான தண்டனை பெற்றுத் தருவதில்லை” என்று கூறினார். ஆண்டுதோறும் முதல மைச்சர் தலைமையில் மட்டுமே எஸ்சி/எஸ்டி ஆணையக் கூட்டம் நடப்ப தாகவும், ஆனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதாந்திர வன்கொடுமை தடுப்புக் குழு கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை என்றும் விமர்சித்தார். “அரசு அதிகாரிகளின் அணுகுமுறை மாற வேண் டும். காவல்துறை, ஆசிரியர் கள், வருவாய் அதிகாரி கள் சாதிவாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கி சமூகப்பிளவை அதிகரிக்கி றார்கள்” என்று கண்டித் தார். பாஜகவின் காதல் பாதுகாப்பு நாடகம் “சில அரசியல் கட்சிகள் சாதிசார்ந்த வேட்பாளர்க ளை நிறுத்தி பிளவுகளை வலுப்படுத்துகின்றன. பாஜக சாதிய குழுக்க ளைப் பயன்படுத்தி செல் வாக்கை வலுப்படுத்த முயல்கிறது. கடந்த நாடாளு மன்ற தேர்தலில் பல தொகு திகளில் பாஜக இரண்டாம் இடம் பெற்றது ஆபத்தா னது” என்றார். “காதலர்கள் யாரும் அண்ணாமலை பேச்சைக் கேட்டு பாஜக அலுவல கத்துக்கு போய் விட வேண்டாம். லவ் ஜிஹாத் பெயரில் காதலர்களை அடித்துத் துரத்திய கூட்டம் அது. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற அண்ணாமலை இப்படிச் சொல்கிறார்” என்றும் கடுமையாக விமர் சித்தார். காதல் திருமணங்களுக்கு தனி பாதுகாப்பு வேண்டும் காதல் திருமணங்க ளைப் பாதுகாக்க தனிச் சட்டம் தேவை என்றும், காவல் துறையினரையே நம்பியும் பாதுகாப்பு பெற முடிய வில்லை என்றும் தெரி வித்தார். “கல்வி, பொருளா தாரம் முன்னேறிய மாநில மாக இருந்தும் சாதிப் படு கொலைகள் நடப்பது அவமானம். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரி லேயே தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று வலியுறுத்தினார். எவிடென்ஸ் அமைப் பின் இயக்குநர் ஏ.கதிர் பேசுகையில், “ஆண வக்கொலைகள் இடைசாதி திருமணங்களால் மட்டு மல்ல, பொருளாதார கார ணங்களாலும் நடக்கின் றன. 2018-ல் மதுரை உயர்நீதி மன்றம் பாதுகாப்பு மையங் கள் அமைக்க உத்தரவிட்டும் செயல்படுத்தப்பட வில்லை” என்றார். தீர்மானங்கள் ஆணவக்கொலை தடுப்பு சிறப்புச்சட்டம் கொண்டுவர வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்பு களும் இணைந்து “சாதி ஆணவக்கொலை எதிர்ப்பு ஓரணி - தமிழகம்” உரு வாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. வழக்கறிஞர் சந்தனம் முன்னிலை வகித்தார்.