மதுரை,ஜன.12- புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை யை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உறுதி செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா என்பவர், 2020 ஆம் ஆண்டில் இக்கிராமத்தில் 7வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சாமிவேல் ராஜா கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளி சாமிவேல் ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக் கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தூக்குத் தண்டனையை எதிர்த்து சாமிவேல் தரப்பிலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உறுதிப்படுத்த காவல்துறை தரப்பிலும் உயர்நீதிமன்ற மது ரை கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்ப ட்டன. இந்த வழக்கை நீதிபதிகள் வைத்திய நாதன், ஜெயச்சந்திரன் அமர்வு புதனன்று விசாரணை செய்தது . விசாரணையின் போது, அரசுத் தரப்பில் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை சரிதான் என்றும் அதனை உறு திப்படுத்துமாறும், உரிய ஆவணங்களையும் ஆதாரங்களையும் எடுத்து வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை முடி வடைந்த நிலையில் ஜனவரி 12 அன்று அளித்த தீர்ப்பில், கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை செய்து தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. எனவே சாமிவேலுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை யை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உறுதி செய்துள்ளது.