எம்.கே. ராமன் உடலுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி
புதுச்சேரி, அக். 23- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மூத்த தலைவர் எம்.கே. ராமன் (வயது - 85) புதன்கிழமை (அக்.22) காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த முன்னாள் முதுபெரும் தலைவர் வ.சுப்பையாவின் வழிகாட்டுதலில் திறம்பட பணியாற்றியவர். சிறு வியா பாரிகளை அணிதிரட்டி அவர்களது உரி மைக்காகக் குரல் கொடுத்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த எம். கே. ராமன் சிறிது காலம் உடல்நலம் குன்றி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மார்க்சிஸ்ட் தலைவர்கள் அஞ்சலி புதுச்சேரி தியாகு முதலியார் வீதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், சீனுவாசன், கொளஞ்சி யப்பன், மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், புதுச்சேரி செயலாளர் சலீம் உள்ளிட்ட தலை வர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
