4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பொதுக் கழிப்பறை
நாமக்கல், ஜூலை 7 – திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் சந்தைப்பேட்டை மைதானத்தில் உள்ள பொதுக் கழிவறை கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டு களாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னை யார் ஊராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டை மைதா னத்தின் அருகில் 2020-2021 ஆம் ஆண்டில் பொதுக் கழிப்பறை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்குக் கொண்டுவரவில்லை. சந்தப்பேட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இட நெருக்கடியில் வாழும் இப்பகுதி மக்களுக்கு, சந்தை திடலின் அருகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பொது சுகாதார வளாகம் செயல்பட்டு வந்தது. இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 5,25,000 மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும், கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கழிப்பறை வசதி யின்றி மிகவும் அவதிப்படுகின்றனர். சுகாதார வளாகத்திற்கு முன்புறம் வாய்க்கால் ஒன்று உள்ளதாகவும், அங்கு சிறிய பாலம் அமைக் கப்படாததே கழிப்பறையைத் திறக்காததற்குக் காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படு கிறது. எனவே, சுகாதார வளாகத்திற்குச் செல்வ தற்குத் தேவையான சிறிய பாலத்தை உடனடி யாக அமைத்து, இந்தப் புதிய பொதுக் கழிப் பறையை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.