tamilnadu

img

பேருந்து வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

பேருந்து வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

திருப்பூர், ஜூலை 21- திருப்பூர் பொங்கலூர் ஒன்றியம்  கண்டியன் கோவில் பெரியாரிப்பட் டிக்கு காலை மற்றும் மாலை நேரங்க ளில் போதுமான பேருந்துகள் இயக்கப் படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமை யாக பாதிக்கப்படுகின்றனர். எனவே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், பெரியாரிப்பட்டி பகுதி பொது மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, பெரியாரிப்பட்டியில் 170க்கு மேற்பட்ட குடும்பங்களில், 600-க்கும்  மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து காங்கேயம், திருப்பூ ருக்குச் செல்ல காலை 7:40, மாலை  6:15 மணிக்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்து செல்கிறது. பேருந்து களுக்கு செல்ல 1.70 கிலோ மீட்டர் தூரம் போக வேண்டி உள்ளது. இரவு நேரத்தில் வருபவர்கள் அச்சத்துடன் காடுகளை கடந்து வர வேண்டி இருக்கி றது. எனவே திருப்பூர் முதல் சம்மந்தம் பாளையம் வரை செல்லும் பேருந்துக ளும், காங்கேயம் முதல் கண்டியன்கோ வில் வரை செல்லும் பேருந்துகளும் பெரியாரிப்பட்டி வந்து சின்னாரிப்பட்டி  கிராமம் வழியாக சென்றால் அனைவ ரும் பயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மதுபான கடையை அப்புறப்படுத்த கோரிக்கை: எஸ்.ஆர்.நகர் வடக்கு குடியிருப் போர் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட் டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,  திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது மண்ட லம் 38 ஆவது வார்டு மங்கலம் சாலை யில் அமைந்துள்ள எஸ்.ஆர்.நகர் பகுதி யில் 950 குடியிருப்புகள் உள்ளன. பெரு மாநல்லூரில் அப்புறப்படுத்தப்பட்ட எண் 1925 மதுபான கடை இங்கு நொய் யல் பிரதான சாலையில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருதி உட னடியாக டாஸ்மாக் கடையை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் கருவம்பாளையம் வெங்க டாசலம் தெருவை சேர்ந்த பிரேம்குமார்  என்பவர் அளித்த மனுவில், எனது இளைய மகன் பொன்குமாருக்கு தலை  முதல் கால் வரை உடல் முழுவதும்  தோல் உரியும் நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் தொடர் சிகிச்சை  பெற்று வருகிறார். இவரது சிகிச்சைக் காக பெருந்தொகை செலவிடப்பட்டு வருவதால் எங்கள் குடும்ப வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு காலி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பெண் தர்ணா: போராட்டம் அவிநாசி சேவூர் ஒச்சம்பாளை யத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் அளித்த மனுவில்,  எனது மகன் சிலம்பர சன் 16 வயதான நிலையில் உடல்நிலை  சரியில்லாததால் கடந்த மார்ச் மாதம் 6  ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை யில் இருந்துள்ளார்.  அல்ட்ரா ஸ்கேன்  எடுத்து வர மருத்துவர் பரிந்துரை செய்த  நிலையில், ஸ்கேன் எடுக்கச் சென்ற போது அங்கு பணியில் இருந்த சித்ரா  என்பவர் டோக்கன் வழங்க தாமதமான தால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட் டது. மேலும், இதனை வீடியோவாக எடுத்து மருத்துவரிடம் புகாரும் அளித் தார். இதனால் மருத்துவர்கள் என்  மகனுக்கு மருத்துவம் செய்ய இயலாது  என மறுத்து கோவை அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு  மருத்துவ சிகிச்சையில் இருந்த எனது மகன் கடந்த 23 ஆம் தேதி இறந்து விட் டார். சரியான முறையில் சிகிச்சை அளிக் காததே என் மகன் இறப்புக்கு காரணம்,   எனது மகன் இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தினார். கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை மனு அளிக்க அழைத்துச் சென் றனர். திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் அளித்துள்ள மனுவில், வீரபாண்டி அரசு மேல்நிலைப்  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடவசதி இல்லாததால், கோவில்வழி சாலையில் அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்திற்கு மாற்றலாம் என மனு  அளிக்கப்பட்டிருந்தது. அறநிலையத் துறை சொந்தமான அந்த இடத்தை பள் ளிக்கு வகை மாற்றி பயன்படுத்த அறநி லையத் துறையில் கடிதம் பெறப்பட்டுள் ளது. இந்த பணிகள் இன்னும் தொடங் கப்படாத நிலையில் விரைவில் துறை  சார்ந்த நடவடிக்கைகளை மேற் கொண்டு பள்ளியை இடமாற்றம் செய்து தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  அதேபோல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.