tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பொதுமக்கள் குறைதீர் முகாம்

பாபநாசம், ஆக. 12-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவல கத்தில், பொது விநியோகத் திட்டம் தொடர்பான, பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.  வட்ட வழங்கல் அலுவலர் சுமதி தலைமை வகித்தார். இதில், ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம்,  முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட 32  மனுக்கள் பெறப்பட்டன.  பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் வரதராஜன், இள நிலை வருவாய் ஆய்வாளர்கள் சேகர், அஜித்குமார் உட்பட  பலர் கலந்து  கொண்டனர்.

உலக சதுரங்கப் போட்டியில்  தூத்துக்குடி மாணவி முதலிடம்  ஆட்சியர் வாழ்த்து

தூத்துக்குடி ,  ஆக. 12- 24 ஆவது உலக தனிநபர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடத்தை வென் மாணவி துர்க்காஸ்ரீ என்பவருக்கு ஆட்சியர் க.இளம்பகவத் வாழ்த்து தெரிவித்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் ,24வது உலக தனிநபர் சதுரங்க  சாம்பியன்ஷிப் IPCA - 2025க்கான போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்ற துர்க்காஸ்ரீ என்பவர் மாவட்ட  ஆட்சியர் க.இளம்பகவத்தி டம் சான்றிதழினை காண்பித்து வாழ்த்துப்பெற்றார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டை வழங்கல்

தூத்துக்குடி, ஆக. 12- தூத்துக்குடியில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர் களுக்கு மானிய விலையில்  மண்ணெண்ணெய் மற்றும் உயிர் காப்பு சட்டைகளை அமைச்சர்கள் பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில்,  , மீனவர்களாகிய நீங்கள் பதிவு பெற்ற படகு வைத்தி ருப்பவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து,  உங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கடற்கரை கிராமத்தை சார்ந்தவர்களுக்கும் புதியதாக மண்ணெண்ணெய் அட்டை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். எனவே, அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், 75 சதவீதம் மானியத்தில் உயிர் காப்பு சட்டை (Life Jacket)யும் வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை பெற்று பய னடைய வேண்டும் என்று தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்  மேயர் பெ.ஜெகன்,  துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்  பாபநாசம், ஆக. 12-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 1 முதல் 8 வரையிலான வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.  உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், கும்பகோ ணம் எம்.எல்.ஏ அன்பழகன் முகாமை தொடங்கி வைத்தனர்.  இதில் பாபநாசம் தாசில்தார் பழனிவேலு, பாபநாசம் பேரூ ராட்சி தலைவி பூங்குழலி உட்பட பலர் பங்கேற்றனர். முன்ன தாக, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் வரவேற்றார்.  இதில் இலவச வீட்டு மனைப்பட்டா, இருப்பிடச் சான்று,  சாதி சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டன.

புதிய மின்கம்பம், மினி டிரான்ஸ்பார்ம்  அமைக்க சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், ஆக. 12-  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி அமைந்துள்ள வார்டு எண். 14 பகுதியில் புதிய மின் கம்பம் மற்றும் மினி டிரான்ஸ்பார்ம் அமைக்கக் கோரி, சிபிஎம் மற்றும் பொதுமக்கள் சார்பாக, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை  மனு அளித்தனர். வலங்கைமான் பேரூராட்சி வார்டு 14 ஆவது இருக்கும் கோவில்பத்து - பாதிரி புரம் செல்லும் வழியில் மின்கம்பங்கள் குறை வாக உள்ளதால் விஷ ஜந்துக்கள் நட மாட்டம் இருப்பதால் பயத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் நடந்து செல்லவே அச்சம் அடைகின்றனர். மேலும், இந்த பகுதியில், குறைவான  மின்சாரம் வருவதால் விடுகளில் மின்விசிறி, கிரைன்டர், மிக்ஸி போன்றவை  சேதமடைகிறது. மின்பற்றாக்குறை ஏற்படா மல் சரியான அளவு மின்சாரம் வழங்கிட கூடுதல் மின் கம்பங்கள் அமைத்தும், புதிய துணை மின் டிரான்ஸ்பாமர் அமைத்திட வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலங்கைமான் துணை மின் அலு வலகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து, நிர்வாகம் மினி டிரான்ஸ்பார்மரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டுவந்தும், அது நிறுவப் படாமல் கிடப்பில் உள்ளது. இதனை சுட்டிக்காட்டியும் இதுவரை நடவடிக்கை இல்லை.  ஆகவே பொதுமக்கள் அச்சமின்றி செல்லவும் மின் சாதனப் பொருள்கள் வீணாகாமல் தடுக்கும் வகையில் மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி, வலங்கை மானில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்  முகாமில், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.முரளி தலைமையில், பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

 

\