tamilnadu

img

13 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் அவயங்கள் வழங்கல்

13 மாற்றுத் திறனாளிகளுக்கு  செயற்கை கால் அவயங்கள் வழங்கல்

தஞ்சாவூர், செப்.11 -  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கினர். 196 பேர் கலந்து கொண்ட இம்முகாமில், 106 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின்கீழ் நவீன செயற்கை கால் அவயம் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6,44,300 மதிப்பில் மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செயற்கை கால் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் அளவெடுக்கப்பட்டது.