பள்ளிக்கு மின்விசிறிகள் வழங்கல்
திருவாரூர், ஆக. 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடவாசல் தெற்கு ஒன்றியம் சார்பாக, கண்டிரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 3 மின்விசிறிகள் வழங்கப்பட்டன. சிபிஎம் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின் தலைமையில், ஒன்றியக் குழு உறுப்பினர் எம். கோபிநாத், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. ஜெகதீஸ்வரி ஆகியோர் கண்டிரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், மூன்று மின்விசிறிகள் வழங்கினர். நிகழ்வில், கட்சியின் மூத்த தோழர்கள் எப். கெரக்கோரியா, கே. ராமதாஸ், கண்டிரமாணிக்கம் கிளைச் செயலாளர் ஜி. ஹரிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.