முனைவர் தர்மலிங்கம் அறக்கட்டளை சார்பில் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வழங்கல்
மயிலாடுதுறை, செப். 10 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெ றும் பள்ளிகளுக்கு, முனைவர் தர்மலிங்கம் அறக்கட்டளை சார்பில், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், மாணவர்களுக்கு விளையாட்டு உப கரணங்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைசிறந்த விஞ்ஞானியும் சுமார் 30 ஆராய்ச்சியாளர்களையும், முனைவர்களை யும், தொழில் முனைவோர்களையும் உரு வாக்கியவர் பேராசிரியர் முனைவர் தர்ம லிங்கம். இவரிடம் ஆராய்ச்சி பட்டப் படிப்பை மேற்கொண்டவர்கள், உலகில் பல்வேறு பகுதி களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது உயர்ந்த நிலையில் இருக்கும் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் உயர் நிலைக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் முனைவர் தர்மலிங்கம் பெயரில் அறக்கட்டளை துவங்கி, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளி களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளையும், ஏழை, எளிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை யும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில், தரங்கம்பாடி பகுதிகளில் முனைவர் கே.தர்மலிங்கம், முனைவர் எஸ்.கருத்த பாண்டியன், முனைவர் குமரவேல், பொறியாளர் சா.கோபால் ஆகியோர் கொண்ட குழு சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் இயக் குனர், முனைவர் சாமுவேல் மனுவேல் உதவி யுடன் பள்ளிகளை பார்வையிட்டு 4 பள்ளி களை தேர்வு செய்தனர். தொடர்ந்து தசுலுதி பேராயர் ஜான்சன் மேல்நிலைப் பள்ளிக்கு ஆர்.ஓ தண்ணீர் சுத்தி கரிப்பு இயந்திரம், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் சேமிப்பு தொட்டி கள் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு உப கரணங்களை வழங்கியதோடு, பள்ளியின் நுழைவு வாயில் கதவுகளை புனரமைப்பும் செய்து கொடுத்தனர். அதே போன்று தரங்கம்பாடி முஸ்லிம் உதவி ஆரம்பப் பள்ளிக்கு ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மேட்டுச்சேரி தசுலுதி ஆரம்பப் பள்ளிக்கு பீரோ, பொறையார் தசுலுதி தலித்தாகூமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி யின் விளையாட்டு மைதானத்தை சுற்றி வேலி அமைத்தும், மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கியுள்ளனர். 4 பள்ளிகளுக்கும் ரூ.4.5 லட்சம் செலவில் கட்டமைப்பு வசதிகளை செய்து தந்த முனை வர் தர்மலிங்கம் அறக்கட்டளையின் பணி யினை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ள னர். பணிகள் முடிவடைந்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்வு அண்மை யில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். த.சு.லு.தி கல்வி கழகத் தலைவர் ஆயர் குணாளன் பாக்கியராஜ் தலை மையேற்றார். சீகன்பால்கு அருங்காட்சியகத் தின் இயக்குநர் முனைவர். சாமுவேல் மனு வேல் நன்றி கூறினார்.
