tamilnadu

img

இடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தருக! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு

இடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தருக! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு

திருச்சிராப்பள்ளி, ஆக. 22-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சிதம்பரம், மாவட்டச் செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளைச் செயலாளர் வினோத், அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா மாகாளிக்குடி என்ற ஊருக்கு கீழ்புறம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் 4 சமுதாயத்திற்கான இடுகாடு உள்ளது. மேற்படி இடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி முறையாக இல்லை. இது சம்பந்தமாக சுமார் 25 முறை அனைத்து அரசு அலுவலங்களிலும் மனு கொடுத்து, போராட்டமும் அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மூலம் சாலை அமைத்துக் கொடுப்பதாக வட்டாட்சியர் முன்னிலையில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே தாங்கள் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்து இடுகாட்டிற்கான சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த மனுவிற்கு பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றால், இறப்பு ஏற்பட்டால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் முன் இறுதிச் சடங்கு செய்வது என்று கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.  அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் கணேசன், முசிறி ஒன்றிய செயலாளர் கதிர்வேல், முசிறி ஒன்றிய தலைவர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.