tamilnadu

கலிபுல்லா நகரில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு மனைப் பட்டா வழங்கி பாதுகாத்திடுக! விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கலிபுல்லா நகரில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு  மனைப் பட்டா வழங்கி பாதுகாத்திடுக!

விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,  ஆக. 12-  ஆலங்குடியை அடுத்த கலிபுல்லா நகரில் பல ஆண்டுகளாக புறம்போக்கில் குடியிருந்து வரும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலங்குடியில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கல்லாலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கலிபுல்லா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசுப் புறம்போக்கில் குடியிருந்து வருகின்றனர். இந்த இடம், நெட்ரூத்துக்கரை நீர்நிலைப் புறம்போக்கு என்று அரசு ஆவணங்களில் உள்ளது. ஆனால், மேற்படி இடம் தற்போது குளமாக இல்லை. கால மாற்றத்தில் அந்த இடம் முழுவதும் குடியிருப்புகளாகவும், வணிக வளாகமாகவும் மாறி விட்டன. எனவே, மேற்படி இடத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி வசித்து வரும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். சிலர் பணம் பறிக்கும் நோக்கத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை பாதுகாப்பதாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, குடியிருக்கும் மக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதை கண்டித்தும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆலங்குடி வட்டங்கச் சேரி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றியச் செயலாளர்கள் சி.பழனிவேல், டி.ராஜா  ஆகியோர் தலைமை வகித்த னர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தலைவர் கே.சண்முகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் த.அன்பழகன், கி.ஜெய பாலன், ஒன்றியச் செய லாளர் எல்.வடிவேல், நகரச் செயலாளர்கள் ஏ.ஆர். பாலசுப்பிரமணியன், ஆர்.ஜி.பாலா உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது, மேற்படி இடத்தை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நபர்கள், ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் மிரட்டும் தொணியில் பேசிவிட்டுச் சென்றனர்.  இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, மேற்படி சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட க்குழு காவல்துறையை வலியுறுத்தி உள்ளது.