குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்குக!
திண்டுக்கல், செப்.22 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி செயலாளர்கள் அனைத்து ஓய்வூதியர்கள் சங்க 3 ஆவது மாநில மாநாடு திண்டுக்கல்லில் திங்க ளன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் எஸ்.இராம மூர்த்தி தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் மு.பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் எஸ்.முபாரக்அலி வரவேற்புரை யாற்றினார். அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனச் செயலாளர் ந.ஜெயச்சந்திரன் துவக்க வுரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பா.ரவி, பொருளாளர் மு.மகாலிங்கம் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். மாநாட்டில் 80 வயது பூர்த்தியடைந்தவர்கள் பாராட்டப்பட்டனர். உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டிய முதல் 3 மாவட்டங்களுக்கு கேடயம் வழங்கப் பட்டது. மாநாட்டை வாழ்த்தி தோழமைச் சங்கத் தலை வர்கள் ச.பாரி, மா.இராசு, க.பிரபு, பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் நிறை வுரையாற்றினார். வரவேற்பு குழுச் செயலாளர் ச.சுப்பிரமணியன் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாநில கௌரவத் தலைவராக மு.பரமேஸ்வரன். மாநிலத் தலைவராக தீ.ச.வி.மூர்த்தி, மாநில பொதுச் செயலாளராக பா.ரவி, மாநிலப் பொருளாளராக வை.நாகராஜன், மாநில துணைத் தலைவர்களாக ஆர்.சுந்தரமூர்த்தி நாயனார், ஏ.பி.முருகேசன், இரா.சுப்பிரமணியம், இர.நடராசன், ப.திரவியம், ச.கோமதிநாயகம், அ.ஜான்செல்வராஜ், மாநிலச் செயலாளர்களாக வ.எ.யுவராஜ், சு.சுப்ரமணியன், பொ.மோகன்ராஜ், கென்னடிபூபாலராயன், வெ. மாணிக்கம், செந்தில்குமார், புஷ்பநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீர்மானங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர், டிசம்பர் மாதங்களில் 2 கட்ட போராட்டங்களை நடத்துவது, சம வேலைக்கு சம ஊதியம் என்பதை தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். ஊராட்சி எழுத்தருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய இயக்குநர் அலுவலகத்திலிருந்து ஓய்வூதியம் பெறுகிறவர் களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.