tamilnadu

img

பட்டாவிற்க்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி தர்ணா

பட்டாவிற்க்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி தர்ணா

தருமபுரி, செப்.11- இலவச வீட்டுமனைப்பட்டா வுக்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி பட்டியலின மக்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி வட்டம், பொம்மிடியில் பட்டி யலின கிறிஸ்தவ மக்களுக்கு சுமார் 35 வருடங்களுக்கு முன்பு, வரு வாய்த்துறை சார்பில் இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட் டன. ஆனால், இந்த பட்டாவிற் குண்டான உரிய இடத்தை, வேறு  நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள தாகவும், தங்களுக்கு வழங்கி யுள்ள வீட்டு மனை பட்டாக்களுக்கு உரிய இடத்தை காண்பிக்க வலியு றுத்தி பலமுறை அரசு அதிகாரிக ளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலை யில், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியு றுத்தி, பொம்மிடியில் வியாழ னன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நிகழ்ச்சி நுழை வாயிலின் முன்பு குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட் டக்காரர்கள் கூறுகையில், 35 ஆண்டுகளில் தாங்கள் 10 மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனு அளித்துள் ளோம். இதுகுறித்து புகார் தெரிவிக் கும் பொழுது அரசு அதிகாரிகள் தங்களை அலட்சியப் போக்குடன் அலைக்கழித்து வருவதாக குற்றஞ் சாட்டினர். இதையடுத்து போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர், வருவாய்த்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதாக அதி காரிகள் உறுதியளித்தனர். அதன் பேரில், ஒன்றரை மணி நேரத்திற் கும் மேலாக நடைபெற்ற தர்ணா நிறைவடைந்து, அனைவரும் அங் கிருந்து கலைந்து சென்றனர்.