மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முகாமில் நடக்கும் சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை, ஆக.20 - மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி களுக்கான முகாமில் நடக்கிற சீர்கேட்டை கண்டித்து திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் யூ.ராஜேந்திரன் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் டி.கணேசன், மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், ஒன்றியச் செயலாளர் செபஸ்திகன், ஒன்றிய துணைத் தலைவர் சபா.அருள்மணி, நகர அமைப்பாளர் கே.ரவி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிக்காக நடைபெறும் மருத்துவ முகாமிற்கு நிரந்தரமான இடம் தேர்வு செய்து மருத்துவமனையிலேயே நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும். பல வகையான சான்று பெற வருபவர் களுக்கு அனைத்து மருத்துவர்களையும் உள்ளடக்கிய மருத்துவ முகாமை நடத்திட வேண்டும். அடையாள அட்டை பெற்ற வர்களுக்கு UDID உடனே வழங்க வேண்டும். பேருந்து, ரயில் பாசை மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் தரங்கம்பாடி, குத்தாலம் மருத்துவமனைகளிலும் வழங்கிட அறிவுறுத்த வேண்டும். காது கேளாதோர், வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியை சான்று பெற அலைக்கழிக்கக் கூடாது. நரம்பியல் மருத்து வரை இம்மாவட்டத்தில் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.