உரிய தேதியில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து தர்ணா
தருமபுரி, செப்.16- மாதந்தோறும் முறையாக ஊதியம், உரிய தேதியில் வழங்காததைக் கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள், பணியை புறக்கணித்து தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் ஒப்பந்த முறையில், தூய்மைக் காவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என 400க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சென்னையைச் சேர்ந்த கிரிஸ்டல் நிறுவனத்தினர் மாதந் தோறும் முறையாக சம்பளம் வழங்காமல் உள்ளனர். இதனால் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மிக வும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம் பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஊழியர்கள் பலமுறை தெரிவித்த போதும், முறையாக சம்பளம் வழங்க நடவ டிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஒப்பந்த முறை யில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலர்கள், பாது காவலர்கள் செவ்வாயன்று காலை 400க்கும் மேற் பட்டோர், பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வலறிந்து வந்த மருத்துவ கண்காணிப்பாளர் சிவக் குமார், பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட் டார். அப்போது, முறையாக சம்பளம் வழங்குவதாக வும், மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.