வேலை பறிப்பில் ஈடுபடும் லாரி செட் உரிமையாளரை கண்டித்து போராட்டம்
திருச்சிராப்பள்ளி, செப். 16- திருச்சி காந்தி மார்க்கெட் லாரி புக்கிங் ஆபீஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்க கூட்டம் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், லாரி புக்கிங் ஆபீஸ் சங்க செயலாளர் ஜி.கே.ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், தொழிலாளர்களின் வேலை பறிப்பில் ஈடுபடும் சேகர் பிரதர்ஸ் லாரி செட் உரிமையாளரின் அடாவடியைக் கண்டித்து, அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது. தமிழ்நாடு சுமைப்பணி சம்மேளன மாநில மாநாட்டு பேரணி ஊர்வலத்தில் லாரி புக்கிங் ஆபீஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்கள் பெரும் திரளாக பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். லாரி புக்கிங் ஆபீஸ் சங்க பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.