முதலமைச்சரின் திட்டங்களால் தமிழக கல்வித் துறையில் முன்னேற்றம்
சென்னை, ஆக. 25- 2021-இல் முதலமைச்சராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டு குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான, உயர்ந்த கல்வி பெற வேண்டும் என பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார். எதிர்காலத்தை நோக்கிய ஒரு துணிச்ச லான முன்னெடுப்பாக தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவ மான பண்பாடு, மொழி மற்றும் சமூக மரபு ஆகியவற்றை உள்ளடக்கி முற்போக்கு டைய ஒரு விரிவான குழந்தை மைய பார்வையை கொண்டதாக அமைந்து உள்ளது. கொரோனா கால கற்றல் இடை வெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் மு.க.ஸ்டாலின் அறிமுகப் படுத்திய இல்லம் தேடி கல்வி திட்டம் 2025-26 கல்வியாண்டில் ரூ.44.14 கோடி ஒதுக்கீட்டில் செயல்பட்டு வரும் 34 ஆயிரம் மையங்களில் 5 லட்சத்து 986 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளி டையே அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் ணறிவை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப் பட்ட “எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் மூலம் 37,767 அரசு மற்றும் அரசு உதவிபெ றும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 25.08 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். தமிழில் சரளமாக வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடையே உறுதி செய்யும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட வாசிப்பு இயக்கத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 28,067 அரசு பள்ளிகளில் அதிவேகமான இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. மீத முள்ள 6,540 அரசுப் பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.352.42 கோடியில் 44 மாதிரி பள்ளி கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்த 28 மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமாக 79,723 இடைநிலை ஆசிரி யர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கை யடக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத் தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது, அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஆகியவற்றுடன் அரசு பள்ளி ஆசிரி யர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி செல வினத்திற்கான உதவித்தொகை ரூ.50 ஆயிர மாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.