கோவை, அக்.2- மாநிலம் முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் இலவச முகாம்களை நடத்துவதற்கான, “மக்களிடம் செல்வோம்” என்ற பயணத்தை தொடங்குவது என அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்குபங்சர் சிகிச்சையா ளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4வது மாநாடு கோவையில் டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் நினைவரங்கத்தில் துவங்கியது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.கோதண்டம் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் ஓ.மந்திரி வரவேற்றார். மதிப்புறு தலைவர் இயற்கை குமார் துவக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் எம்.என்.பி.ரமேஷ்பிரபு வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் எஸ்.பழனிச்சாமி வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமர்வில்,
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். ஏழை, எளிய மக்களின் பொரு ளாதார நிலைக் கேற்ற மருந் தில்லா மருத்துவ முறையில் அக்குபஞ்சர் மருத்துவத்தையும், அக்குபஞ்சர் மருத்துவர்களையும் அங்கீகரித்து, பாதுகாப்பாக மருத்துவ தொழிலை செய்ய பதிவு வழங்கும் வகையில் தமிழ் நாடு அரசு அக்குபஞ்சர் கவுன்சில் அமைக்க வேண்டும். இந்திய ஒன்றிய அரசு 2019 ஆம் ஆண்டு, அக்குபங்சர் சிகிச் சையாளர்களை அங்கீகரிப்பதற் கான அமைப்பை கட்டமைப்ப தற்கான அபெக்ஸ் கமிட்டியை அமைத்து 4 ஆண்டுகள் கடந்து விட்டது. அதற்கான பணிகளை துரிதப்படுத்தி அக்குபங்சர் சிகிச்சையாளர்களை அங்கீக ரிக்கும் வகையில் உடனடியாக ஆவண செய்ய வேண்டும். இன்றைய சுகாதார சூழலை கருத்தில் கொண்டு மக்களின் ஆரோக்கியம் காக்க, நகர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சேவை ஆற்றும் வகையில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம், நமது சங்கத்தின் இலவச முகாம்கள் நடத்த வேண்டும். அதற்கான “மக்களிடம் செல்வோம்” என்ற பயணத்தை தொடங்குவது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் சங்கத்தின் கவுரவ தலை வராக இயற்கை குமார், மாநிலத் தலைவராக மு.கோதண்டராமன், பொதுச் செயலாளராக எம்.என்.பி.ரமேஷ்பிரபு, பொருளாளராக எஸ்.பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.