லக்னோ, மார்ச் 2- உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசா னது, கடந்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களை வஞ்சித்து இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரி யங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை யின் 6-ஆம் கட்டத் தேர்தல் பிரச்சா ரத்தையொட்டி, குஷிநகரில் பிரியங்கா காந்தி வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: “கடந்த 5 ஆண்டுகளாக உத்த ரப்பிரதேச இளைஞர்களுக்கு வேலை கள் கிடைக்கவில்லை. இதற்கு மாநி லத்தில் நிரப்பப்படாமல் உள்ள 12 லட்சம் அரசுப் பணியிடங்களும் காரணம். தமது உரைகளில் பிரதமர் மோடியும், முதல் வர் ஆதித்யநாத்தும் பெரிய, பெரிய வாக்குறுதிகளை அளித்தும் பணியிடங் களை நிரப்பவில்லை. கடந்த தேர்தலில் 70 லட்சம் பேருக் கான வேலைவாய்ப்புகளுக்கு உறுதி அளித்தனர். ஆனால், வெறும் நான்கு லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. விலைவாசி மற்றும் பெட்ரோல் விலை உயர்வால், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. மோடி அரசு நாட்டின் பொதுத்துறை நிறு வனங்களையும், விமானநிலையங் களையும், துறைமுகங்களையும் தனது முதலாளி நண்பர்களுக்கு விற்பனை செய்கிறது. இதனால், உத்தரப்பிரதேச இளைஞர்கள் வேலை தேடி தங்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டி யக் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். இவற்றை மறைக்க, தேர்தல் சம யங்களில் இந்து - முஸ்லிம் உள்ளிட்ட சாதி-மத துவேஷப் பேச்சுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். இதை உணராமல் பாஜக-விற்கு கண் மூடித்தனமாக வாக்குகளை அளிக்கக் கூடாது. இனியாவது இப்பிரச்சனை களுக்கு மக்கள் முடிவு கட்ட வேண் டும்.” இவ்வாறு பிரியங்கா காந்தி பேசி யுள்ளார்.