tamilnadu

img

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தால் உயர்கல்வி மேலும் வியாபாரமயமாகும்!

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தால் உயர்கல்வி மேலும் வியாபாரமயமாகும்!

சட்டப்பேரவையில் சிபிஎம் உறுப்பினர் நாகை மாலி எச்சரிக்கை

சென்னை, அக். 18- தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தனி யார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தத்தால், உயர்கல்வியில் தனியார் கல்வி  நிறுவனங்களின் ஆதிக்கம் அதி கரிக்கும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எச்சரித்தது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் உள்ளிட்டவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கும் வகையில், 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல் கலைக்கழகச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இதற் கான சட்ட முன்வடிவு, தமிழக சட்ட மன்றத்தில் வியாழனன்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.  செழியனால் தாக்கல் செய்யப் பட்டது. அதைத்தொடர்ந்து நடை பெற்ற விவாதத்தில், தனியார் பல் கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் உயர்கல்விக்  கொள்கைகள் நீர்த்துப் போகும் உயர்கல்வியில் இதுவரை தமிழ்நாடு பின்பற்றி வந்த கொள்கை கள் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நீர்த்துப் போகும். உயர்கல்வியை யும் தனியார் கல்வி நிறுவனங்கள் கைப்பற்றக்கூடிய சூழல் ஏற்படும். தனியார் ஆதிக்கம் உயர்கல்வியில் மேலும் இறுக்கமாகும். தமிழக அரசும் - தமிழக மக்க ளும் கடுமையாக எதிர்த்து வரும் ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு துணை போவதற்கே இந்த சட்டத் திருத்தம் வழி வகுக்கும். ஏழை - எளிய மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குடும்பங்களைச் சார்ந்த பிள்ளை களின் உயர்கல்வி கனவை சிதைத்து விடும், இட ஒதுக்கீடு கேள்விக்குறி யாக மாறிவிடும். கல்விக் கட்டணக் கொள்ளைக்கு வழிவகுக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் கட்டணக் கொள்ளை அடிப்பதற்கும் வழி வகுத்துவிடும். ஏழை - எளிய,  பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களின் பிள்ளைகள் உயர்  கல்வியில் சேர்வது எட்டாக்கனியாக மாறிவிடும். இந்தச் சட்டத்தை கடந்த காலத்தில் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தபோது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து அது கைவிடப்பட்டது. இத்தகைய பின்னணியில் மீண்டும் அந்த மசோதாவை கொண்டு வருவது உயர்கல்வியில் மிகுந்த பின்னடை வை ஏற்படுத்தும். இவ்வாறு சிபிஎம் உறுப்பினர் நாகை மாலி எம்எல்ஏ பேசினார். திருத்தங்கள் அவசியம்:   தி. வேல்முருகன் வலியுறுத்தல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ பேசும்போது, கல்வி நிறுவனங்கள் பெருகுவதை வரவேற்றாலும், சட்டத்தில் சில திருத்தங்கள் அவசியம் தேவை என்று தெரிவித்தார். தனியார் பல்கலைக் கழகங்களில் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாண வர்கள் அதிகம் படிப்பதையும், தமிழக மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்துவதையும் சுட்டிக்காட்டினார். தனியார் பல்கலைக்கழகங்கள் புற்றீசல் போன்று வளர்ந்து மிகப் பெரிய வணிக நோக்கத்தோடு நடத்தப்படுவதை விமர்சித்த வேல்முருகன், குறிப்பாக தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுவதில்லை என்று குற்றம் சாட்டினார். அமைச்சர் களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ கடிதம் கொடுத்தாலும் தனியார் நிறு வனங்கள் அதை ஏற்பதில்லை என்று கூறினார். சிறுபான்மையினருக்கு சலுகை வழங்குவதை வரவேற்றாலும், தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட மொழிவழிச் சிறுபான்மையின ருக்கும் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று வேல்முருகன் வலி யுறுத்தினார். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் வணி கக் கொள்ளையில் ஈடுபட்டு தமிழ் நாட்டின் கல்வியை தனதாக்கிக் கொண்டதாகவும், நிலங்களைப் பறித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் களை வளைத்து பல்கலைக்கழ கங்களை தனதாக்கிக் கொண்ட தாகவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான பிரச்சனை களுக்கு தீர்வு காணும் வகையில் மாற்றங்களோடு சட்டத்தை நிறை வேற்றினால்தான் எதிர்கால தமிழ்ச் சமூகம் இந்த மண்ணில் கல்விபெற முடியும் என்று வேல்முருகன் தெரி வித்தார். இல்லையெனில் வெளி நாட்டினருக்கோ அல்லது வெளி மாநிலத்தவருக்கோ மட்டுமே கல்வி  கொடுக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தார். உயர்கல்வித் துறை அமைச்சர்  கோவி. செழியன் விளக்கம் இதைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பதிலளிக்கையில், தனியார் பல்கலைக்கழகங்களில் 35 சதவிகித இடங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக தெரி வித்தார். தமிழ்நாட்டு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று உறுதி யளித்தார். இடஒதுக்கீடு கொள்கை யில் பிதாமகன் ஆளுகிற மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் குறிப் பிட்டார்.