tamilnadu

img

பட்டியல் வகுப்பு மாணவர்களை கழிப்பறையை கழுவச் செய்த தலைமையாசிரியர் கைது

மதுரை, டிச.3- பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாண வர்களை பள்ளியின் கழிப்பறையை சுத்தம்  செய்யுமாறு கட்டாயப்படுத்திய தலைமை யாசிரியரை சனிக்கிழமை காலை காவல் துறையினர் செய்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள பாலக்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில்  படிக்கும் பட்டியல் வகுப்பு மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு தலை மையாசிரியர் கீதா ராணி கூறியுள்ளார். மாணவர்களும் பிளீச்சிங் பவுடரால் கழிப்பறையை சுத்தம் செய்துள்ளனர். இத னால் சில மாணவர்களின் கைகளில் கொப்பு ளங்கள் வெடித்துள்ளன. ஆறு மாணவர் களில்  ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்  ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்  பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டுள்ளார். அப்போது அந்த மாணவர்  தனது தாயாரிடம் பள்ளியின் தலைமை யாசிரியர் இரண்டு கழிவறைகளை சுத்தம் செய்யுமாறு கூறினார். அதில் ஒன்று ஆசிரி யர்களுக்கானது. மற்றொன்று மாணவர் களுக்கானது என்று கூறியுள்ளார். மாணவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின் அவரது தாயார்

இந்தச்  சம்பவம் குறித்து பெருந்துறை காவல்துறை யில் புகார் செய்தார். இதையடுத்து மூன்று  வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாணவர் கள், பெற்றோர்கள், மதிய உணவு சமைப்ப வர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை  நடத்தினர். விசாரணையில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தது உண்மை  என்பது தெரியவந்தது. இந்த அறிக்கை யைப் பெற்றுக் கொண்ட  மாவட்டக் கல்வி  அலுவலர் ஜோதி சந்திரா நவம்பர் 30-ஆம்  தேதி தலைமையாசிரியரை பணியிடை நீக்  கம் செய்தார். இந்த நிலையில் பள்ளித் தலைமையாசி ரியர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம்,  சிறார் நீதிச் சட்டம் பிரிவு 75, பிரிவு 284  (விஷப் பொருள் தொடர்பாக அலட்சிய மாக நடத்துதல்), பட்டியல் வகுப்பினர்  பட்டி யல் பழங்குடியினரை வன்கொடுமை செய்  தல் (வன்கொடுமைகள் தடுப்பு) திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவ ரைத் தேடி வந்தனர்.  சனிக்கிழமை காலை, பெருந்துறையில் தலைமையாசிரியர் கீதா ராணியை காவல்  துறையினர் கைது செய்தனர்.

;