tamilnadu

img

ரூ. 31,500 கோடி திட்டங்கள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

சென்னை, மே 26- தமிழகத்தில்  சாலை, நெடுஞ்சாலை, ரயில்வே, நகர்ப்புற வீட்டுவசதி வாரியம், பெட்ரோலியம்,இயற்கை எரிவாயு உள்ளிட்ட துறைகள் சார்பில் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னையில்  அடிக்கல் நாட்டினர்.   முடிவுற்ற பல்வேறு பணிகளையும் அவர் துவக்கிவைத்தார். தேசிய நெடுஞ்சாலை துறையின் 409 கிலோ மீட்டர் நிலத்திற்கான 5 திட்டங்களான சென்னை - பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ.  விரைவுச் சாலை. சென்னை துறைமுகம் - மதுர வாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட  சாலை; நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை, ரூ.720 கோடியில் மீன்சுருட்டி - சிதம்பரம் நான்கு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ரயில் நிலையங்கள் சீரமைப்பு

சென்னை எழும்பூர், இராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் ரூ.1,800 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன. சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை அருகே மப்பேட்டில் ரூ.1,400 கோடியில் பன்மாதிரி போக்கு வரத்து பூங்கா (மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்) அமைக்கப்படுகிறது. இத்திட்டம் உட்பட மொத்தம் ரூ.28,500 கோடி மதிப்பி லான திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மதுரை-தேனி அகல ரயில்பாதை 

மதுரை - தேனி இடையே ரூ.500 கோடி யில் மேம்படுத்தப்பட்ட அகல ரயில் பாதை,  சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடை யே ரூ.590 கோடியில் 3-வது ரயில் பாதை, எண்ணூர் - செங்கல்பட்டு இடையே ரூ.850  கோடியில் 115 கி.மீ. நீளத்துக்கான இயற்கை  எரிவாயு குழாய் திட்டம், திருவள்ளூர் - பெங்களூரு இடையே 271 கி.மீ. தொலை வில் 910 கோடியிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அத்துடன், ரூ.2,900 கோடியில் முடிக்கப்பட்டுள்ள 5 திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்து, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தின் ஒரு பகுதி யாக சென்னையில் ரூ.116 கோடியில் கட்டி  முடிக்கப்பட்டுள்ள 1,152 வீடுகளை பயனாளி களுக்கு வழங்கினார்.

முன்னதாக, ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாறு வந்தார். பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்ச ர்கள் நிதின்கட்காரி, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங், வி.கே.சிங், எல்.முருகன், மாநில  அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கர்நாடக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

;