குடியரசுத் தலைவர் தமிழகம் வந்தார் துணை முதல்வர் நேரில் வரவேற்பு
சென்னை, செப். 2 - இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப்.2) 11:40 மணிக்கு மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்திறங்கி னார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அமைச் சர்கள் தா.மோ. அன்பரசன், கீதா ஜீவன், மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். விமான நிலையத்திலிருந்து நந்தம் பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்திற்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரை யாற்றினார். இந்நிகழ்ச்சிக்குப் பின், கிண்டியிலுள்ள ராஜ்பவனில் தங்கி ஓய்வெடுத்தார். புதன்கிழமை (செப்.3) விமானத்தில் திருச்சி புறப்பட்டுச் செல்லும் குடியரசுத் தலை வர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திரு வாரூர் சென்று, மத்திய பல்கலைக்கழ கத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரு மளவில் பலப்படுத்தப்பட்டுள்ளன.