tamilnadu

2026 கோடைக் காலத்திற்கான முன்னேற்பாடு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அரசு திட்டம்!

2026 கோடைக் காலத்திற்கான முன்னேற்பாடு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அரசு திட்டம்!

சென்னை, செப். 3 - தமிழ்நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தால், அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் மின்சாரத் தேவையை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் தினசரி மின்சார தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகா வாட் அளவில் உள்ளது. கோடைக் காலங்களில் இது 20 ஆயிரம் மெகா வாட் கடந்து அதிகரிக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டைக் கடந்தது. மே மாதத்தில் மின்சார தேவை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், மழையின் காரணமாக அது அதிகரிக்கவில்லை.  எனினும், 2026-2027ஆம் ஆண்டில் தமிழகத்தின் மின்சாரத் தேவை 23 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு  கோடைக்காலத்தில் மின்சாரத் தேவையை சமாளிக்க வெளிச்சந்தை யில் குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார  பகிர்மானக் கழகம் திட்டமிட்டு உள்ளது. தடையில்லா மின்சார விநி யோகத்திற்காக வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் இருந்து மே 15 வரை 7 ஆயிரத்து 40  மெகாவாட் மின்சாரம் வாங்க குறுகிய ஒப்பந்தப்புள்ளி கோருவ தற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார  பகிர்மான கழகம் அனுமதி கோரி யிருந்தது. இதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கி யுள்ளது.  அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்  720 மெகாவாட், மார்ச் மாதம் 1,520  மெகாவாட், ஏப்ரல் மாதம் 2,400 மெகா வாட், மே மாதம் 2,400 மெகாவாட் கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அதில்  நாள் முழுவதும் 4 ஆயிரத்து 400  மெகாவாட்டும், மாலை 6  மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையிலான உச்ச நேரத்தில் 2 ஆயி ரத்து 640 மெகாவாட்டும் மின்சாரம் பெறப்படும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.